YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

திருத்தணியில் வெட்டப்பட்ட வடமாநில இளைஞரின் குடும்பம் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

பரப்பப்படும் புகைப்படம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதிவிட்ட பழைய புகைப்படம் ஆகும்.

பொய்

தமிழ்நாட்டில் கோயில்கள் மட்டும் தான் இடிக்கப்பட்டுள்ளதாக பொய் செய்தி பரப்பும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் 161 கோவில்கள் இடிக்கப்பட்டதாக அண்ணாமலை சொல்லும் தகவல் எந்த ஆதாரமும் இல்லாமல் 2022லிருந்தே பரப்பபட்டு வருகிறது. மேலும் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி,…

பொய்

இந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

இந்தியாவிலே ஒடிசா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதிக ஊதியம் வாங்குகிறார்கள்.

பொய்

அரிவாளால் வெட்டப்பட்ட வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாகப் பரவும் செய்தி! உண்மை என்ன?

திருத்தணி ரயில் நிலையம் அருகே, நான்கு சிறார்கள் போதையில் அரிவாளால் வெட்டிய வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாகப் பரவும் செய்தி தவறானது. அவர் சிகிச்சை முடிந்து சொ…

தவறானது

தமிழ்நாட்டின் கடன் அபாயநிலையில் உள்ளதா? பிரவீன் சக்ரவர்த்தியின் உருட்டு!

உண்மை நிலையை திரித்து தமிழ்நாட்டின் நிதிநிலை அபாயகரமான நிலையில் இருப்பதாக பிரவீன் சக்கரவர்த்தி தவறாக பரப்பி வருகிறார்.

பொய்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் தேவாலயத்தை சேதப்படுத்தியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

2025 பிப்ரவரி மாதம் வாட்டிகன் நகரத்தில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை ரோமானியா நாட்டைச் சேர்ந்தவர் சேதப்படுத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

'ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு செல்லும் வாகனங்கள்' என்று தவறான செய்தி வெளியிட்ட தினத்தந்தி!

பரவி வரும் புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு நிகழ்வுகளுக்காக, பல்வேறு ஊடகப் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து வெளி…

பழைய புகைப்படம்

காங்கிரஸ் கட்சிக்கு கூடிய கூட்டம் என்று பரவும் பழைய புகைப்படம்!

பரவி வரும் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சிக்கு கூடிய கூட்டம் என்று கூறி தவறாகப் பரப்புகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு கொல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அமைப்புகள…

பொய்

கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடமா?

RLC அமைப்பு, கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வும் அதிக வன்முறைகளும் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு எட்டாவ…

பொய்

'ரயிலில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட டிடிஆர்' எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

சித்தரிக்கப்பட்ட போலி வீடியோவை, ‘ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட TTR’ எனக் கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

மோசடி

வங்கிகளின் பெயரில் தனிப்பட்ட தரவுகளை கேட்டு அனுப்பப்படும் APK File-கள் மோசடியானது! எச்சரிக்கை!

வங்கிகளின் பெயரில் APK File தரவிறக்கம் செய்யச் சொல்லி வாடிக்கையாளர்களது தனிப்பட்ட விவரங்களை கேட்டு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மோசடியானது.

பொய்

'திருமணத்திற்கு முன்பு முன்னாள் காதலரை சந்தித்த மணப்பெண்' எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

சித்தரிக்கப்பட்ட வீடியோவை, 'திருமணத்திற்கு முன்பு முன்னாள் காதலரை சந்தித்த மணப்பெண்' எனக் கூறி உண்மையான சம்பவம் போல் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்