யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சிக்கு கூடிய கூட்டம் என்று கூறி தவறாகப் பரப்புகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு கொல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அமைப்புகள் நடத்திய பேரணியின் பழைய புகைப்படம் இது.
பரவிய செய்தி
காங்கிரஸ் எங்கே... காங்கிரஸ் இனி அவ்வளவு தான்... காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று கூறியவர்களுக்கு..

விரிவான விளக்கம்
டெல்லியில் டிசம்பர் 14 அன்று வாக்குத் திருட்டுக்கு எதிராக ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் அப்பதிவில், “காங்கிரஸ் இனி அவ்வளவு தான் என்று கூறியவர்களுக்கு, காங்கிரஸ் கட்சிக்காக கூடிய கூட்டம்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில் இது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்தே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டிருந்தது.
Sea of people throngs at the Joint Rally of @INCIndia & @CPIM_WESTBENGAL at Brigade Ground in the Heart of Kolkata!
This shows the anger of people in West Bengal, This will surely give sleepless nights to rulers in Delhi as well as Kolkata. pic.twitter.com/XtAH9y52DW
“Peoples Democracy“ ஊடகப் பக்கத்தில், பரவி வரும் புகைப்படம் கடந்த 2019 பிப்ரவரி 06 அன்று “மாற்றுக் கொள்கைகள் மற்றும் மாற்று அரசியலை வலியுறுத்துவதற்காக, இடதுசாரி கட்சிகளின் அழைப்பின் பேரில், பிப்ரவரி 3 ஆம் தேதி கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர்” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதே போன்று “Alamy“ இணையப்பக்கத்திலும் பரவி வரும் புகைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில் டெல்லியில் டிசம்பர் 14 அன்று வாக்குத் திருட்டுக்கு எதிராக ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் பரவி வரும் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சிக்கு கூடிய கூட்டம் என்று கூறி தவறாகப் பரப்புகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு கொல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அமைப்புகள் நடத்திய பேரணியின் பழைய புகைப்படம் இது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.