யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
20 ஆண்டுகளுக்கு முன்னர் 2005ஆம் ஆண்டிலே சீனாவில் 4000 ஆண்டுகள் பழையான நூடுல்ஸை சீனா அறிவியல் அகாடமியால் கண்டுபிடிக்கப்பட்டு செய்தியாக வெளியிடப்பட்டது.
பரவிய செய்தி
சீனாவின் லாஜியா தொல்லியல் தளத்தில் 4,000 ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் நிரம்பிய கிண்ணம் கண்டுபிடிப்பு
இதுவே இதுவரை கண்டறியப்பட்ட நூடுல்ஸின் மிகப் பழமையான நேரடி சான்றாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்
#China #Lajia #4000YearsOld #Noodles #Discovery #thanthitv


விரிவான விளக்கம்
ஒரு தொல்லியல் தளத்தில் பழங்கால கிண்ணத்தில் நூடுல்ஸ் இருக்கும் புகைப்படத்தைக் கொண்டு, சமீபத்தில் சீனாவில் உள்ள லாஜியா என்ற தொல்லியல் தளத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வில் 4000 ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் நிரம்பிய கிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதுதான் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட நூடுல்ஸின் மிகப் பழமையான நேரடி சான்று என்றும் ‘தந்தி டிவி’, கடந்த ஜூலை 14ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடியபோது, ‘NBC News’ ஆங்கில செய்தித்தளத்தில் 2005 அக்டோபர் மாதம் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

அதன்படி, ’வடமேற்கு சீனாவில் மஞ்சள் நதியையொட்டி உள்ள தொல்லியல் தளம் ஒன்றில், கவிழ்த்து வைக்கப்பட்ட ஒரு கிண்ணம் ஒன்று கிடைத்தது. அந்தக் கிண்ணத்தில் 4000 ஆண்டுகள் பழைமையான நூடுல்ஸ் கண்டுபிடித்துள்ளதாகவும், இதன் மூலம் சீனாவில் தான் முதன்முதலில் நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபனமாகியுள்ளதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ’NATIONAL GEOGRAPHIC’ செய்தித்தளத்தில் 2005 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில், ’வடமேற்கு சீனாவில் உள்ள லாஜியா தொல்லியல் தளத்தில் கவிழ்த்து வைக்கப்பட்ட மூடிய கிண்ணம் ஒன்று ’சீன அறிவியல் அகாடமி’யைச் சேர்ந்த ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 4000 ஆண்டுகள் பழையான நூடுல்ஸ் கிடைத்தது. இதன் மூலம் இதுவரை நூடுல்ஸ் என்பது இத்தாலியில் தான் முதலில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டதற்கு மாறாக நூடுல்ஸ் முதன்முதலில் சீனாவில் தான் தயாரிக்கப்பட்டது என்பது உறுதியானதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு 20 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான செய்தியை சமீபத்தில் தொல்லியல் துறை புதிதாக கண்டுபிடித்துள்ளதாக ‘தந்தி டிவி’ தவறாகப் பரப்பி வருகின்றது.
முடிவு:
20 ஆண்டுகளுக்கு முன்னர் 2005ஆம் ஆண்டிலே சீனா அறிவியல் அகாடமியச் சேர்ந்த ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பழையான நூடுல்ஸை தற்போது புதிதாக கண்டிபிடிக்கப்பட்டதாக தவறான செய்தியை இந்திய ஊடகங்கள் பரப்பி வருகின்றன.