யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற்காக பெற்றுள்ளார். இதன்படி பார்க்கையில் தேசிய விருது பெற்ற முதல் பெண் பின்னனி பாடகர் பி.சுசீலா என்பதை தெளிவாக அறிய முடிகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி 88 வயதில் ஜூலை 11 அன்று கர்நாடக மாநிலம் மைசூருவில் காலமானார்.
இவரது சாதனைகளை நினைவுக்கூறும் வகையில், தந்தி டிவி ஊடகம் ஜூலை 12 அன்று நியூஸ் கார்ட் ஒன்றை தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுருந்தது. அதில் பாடகர்களுக்கு தேசிய விருது இல்லாமல் இருந்த நிலையில், அந்த காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டு, 16 வயதினிலே படத்தில் ‘செந்தூரப்பூவே...' பாடலுக்கு எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முதல் தேசிய விருது#SJanaki #RIPSJanaki #RememberingSJanaki #LegendSJanaki #PlaybackLegend #TamilMusic #IndianMusic #EvergreenVoice#MusicalLegend #TributeToSJanaki #Thanthitv pic.twitter.com/MYkVkN5CwR
உண்மை என்ன?
முதன் முதலில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது தேசிய விருது வழங்கும் வழக்கம் 1954 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது என்பதை தேசிய திரைப்பட விருதுகள் இணையதளப் பக்கத்தில் பார்க்கமுடிந்தது. ஆனால் அப்போது பின்னணி பாடகருக்கான எந்த விருதும் அழிக்கப்படவில்லை.
இந்த நிலையில் முதன்முதலில் பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருது வழங்கப்பட்டது குறித்து தேடினோம். அப்போது 1968 ஆம் ஆண்டில் நடந்த 15 ஆவது தேசிய விருது விழாவின் வெற்றியாளர் பட்டியல் கிடைத்தது. அதை பார்க்கும் போது தான் பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடிந்தது. அதில் மகேந்திர கபூர் எனும் பாடகர் உப்கர் திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி பாடகர் விருதை முதன்முதலில் பெற்றுள்ளார்.

இதையடுத்து பெண் பின்னணி பாடகர் விருது எப்போது வழங்கப்பட்டது என்பதை பார்த்தப் போது, 16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் தான் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருது இணைக்கப்பட்டது என்பதை உறுதி செய்யமுடிந்தது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற்காக பெற்றுள்ளார். இதன்படி பார்க்கையில் தேசிய விருது பெற்ற முதல் பெண் பின்னனி பாடகர் பி.சுசீலா என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தந்தி டிவி வெளியிட்டுள்ள செய்தி தவறானது.
