யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ₹5,725 என்பது, ஒரு கிராம் தங்கத்தின் விலை அல்ல; டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய டெண்டர் ஆவணக் கட்டணம் (Tender Document Cost) ஆகும். அரசுத் துறைகள் வெளியிடும் பல டெண்டர்களில், டெண்டர் ஆவணங்களை வழங்குவதற்கும், டெண்டர் செயல்முறையை நிர்வகிப்பதற்கும், Tender Document Cost என்ற பெயரில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பரவிய செய்தி
ஊழலோ ஊழல் தூய சக்தி ஆட்சியில் தங்க ஊழல். ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 13150 ரூபாய். ஆனால் இந்த தூய சக்தி ஆட்சியில் ஒரு கிராம் தங்கத்தை 5725 ரூபாய்க்கு வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அப்படி என்றால் அதில் தங்கத்தின் தரம் 9 சதவீதம் தான், மீதம் 91 சதவீதம் பித்தளையும் செம்பும்தான்.

விரிவான விளக்கம்
அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.15ஆம் தேதி தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த திட்டத்திற்குற்காக ஒரு கிராம் தங்கம் ரூ.5,725-க்கு கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது என்று ‘நியூஸ்18 தமிழ்நாடு ஊடகம், Sathiyam News போன்ற ஊடகங்கள் செய்தி ஒன்றை வெளியிட்டுருந்தது. தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
முதலில் இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது இது குறித்தான அரசாணையை பார்க்கமுடிந்தது. அதன்படி, பார்க்கும் போது, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்குற்கான டெண்டர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ₹5,725 என்பது, டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய டெண்டர் ஆவணக் கட்டணம் ஆகும். இது ஒரு கிராம் தங்கத்தின் விலை கிடையாது.

இதையடுத்து அரசுத் துறைகள் வெளியிடும் பிற டெண்டர்களில் நுழைவு கட்டணம் இருப்பது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு 2D டிஜிட்டல் மேமோகிராபி (Mammography) அமைப்பை வழங்குவதற்கும், நிறுவுவதற்குமான விலை ஒப்பந்தத்தை நிர்ணயிப்பதற்கான இணையவழி ஒப்பந்தப்புள்ளியை, TAMILNADU MEDICAL SERVICES CORPORATION LIMITED வெளியிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது. அதிலும் இதே போன்று ₹5,725 ஆவணக் கட்டணம் இருந்ததை பார்க்கமுடிந்தது.

மேலும் அரசுத் துறைகள் வெளியிடும் பல டெண்டர்களில்,டெண்டர் ஆவணங்களை வழங்குவதற்கும்,டெண்டர் செயல்முறையை நிர்வகிப்பதற்கும், Tender Document Cost என்ற பெயரில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது தெரியவந்தது.
முடிவு:
எனவே, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்குற்கான டெண்டர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ₹5,725 என்பது, ஒரு கிராம் தங்கத்தின் விலை அல்ல; டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய டெண்டர் ஆவணக் கட்டணம் (Tender Document Cost) ஆகும். இதை ஒரு கிராம் தங்கத்தின் விலை என்று ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளது.