யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்த்த போதும் எடுக்கப்பட்டவை ஆகும்.
பரவிய செய்தி
இந்தியா-சீனா எல்லையில் மீண்டும் பேரழிவு. சீன இராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் 60 கி.மீ. வரை ஊடுருவி அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்!
விரிவான விளக்கம்
இராணுவச் சீருடை அணிந்த படை ஒரு கிராமத்திற்குள் அணிவகுத்து நுழைகிறது. அந்த கிராமத்தினர் கைகளில் தடிக்கம்புகளை கொண்டு அந்த இராணுவத்தினரை தடுக்கிறார்கள். இதனை காட்சிபடுத்தும் மூன்று வீடியோ துணுக்குகளை பேஸ்புக் தளத்தில் பதிவிட்டு, ‘இந்தியா சீனா எல்லையை கடந்து சீன இராணுவ வீரர்கள் இந்தியாவிற்குள் 60 கி.மீ வரை ஊடுருவி விட்டதாக’ பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோக்களின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடினோம்.
முதலில், தாய்லாந்தை மொழியில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் இராணுவப் படை ஒன்று அணி வகுத்துச் செல்லும் வீடியோவைக் காணமுடிந்தது. கடந்த ஜூன் 16ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், தாய்லாந்து மொழியில் ‘நீண்ட தூர பயணம்’ என்றும், 102ஆவது படைப்பிரிவு (Regiment) என்றும் எழுதப்பட்டிருந்தது.
मणिपुर के उखरुल जिले के शोक्वाओ और न्यू हेवन इलाके में रविवार सुबह सैकड़ों महिलाओं ने असम राइफल्स के जवानों और उनके वाहनों का भारी विरोध किया। महिलाओं के हाथों में मशालें, लाठियां थीं। तंग्खुल नगा समुदाय की ये महिलाएं ‘हमारी जमीन, हमारा अधिकार’ का नारा लगाते हुए जवानों को आगे… pic.twitter.com/YDATSscQ4T
அடுத்ததாக, ’Lallu Ram’ என்ற ‘எக்ஸ்’ பக்கத்தில் மக்கள் தடிகளுடன் இராணுவத்தை எதிர்கொள்ளும் வீடியோவைக் காணமுடிந்தது. கடந்த ஜூன் 8ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த பதிவில், ’மணிப்பூரில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் உள்ள கிராம் ஒன்றில் ’அசாம் ரைபில்ஸ்’ படை நுழைவதை எதிர்த்து நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டம் நடத்தியதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கொண்டு தேடியதில், ‘India Today’ செய்தித்தளத்தில் கடந்த ஜூன் 8ஆம் தேதி வெளியாகியுள்ள செய்தியைக் காணமுடிந்தது. அதில், ‘மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள நீயூ ஹவன் என்ற கிராமத்தில் கிராம நிர்வாகத்தின் அனுமதி பெறாமலே ’அசாம் ரைபில்ஸ்’ படை சாவடி அமைக்க முயன்றதை கிராமத்தில் உள்ள பெண்கள் எதிர்த்தனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் இந்த வீடியோக்கள் தாய்லாந்து நாட்டின் இராணுவப் படைப்பிரிவு ஒன்று அவர்களது நாட்டில் நீண்ட அணிவகுப்பு மேற்கொண்டது, மணிப்பூர் மாநிலத்தில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் சாவடி அமைப்பதை மக்கள் எதிர்த்தது ஆகிய சம்பவங்கள் குறித்தவை தான் என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
சீன இராணும் இந்திய எல்லைக்குள் 60 கி.மீ வரை ஊடுருவி அணிவகுப்பு செய்வதாக தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.