YouTurn

அரிவாளால் வெட்டப்பட்ட வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாகப் பரவும் செய்தி! உண்மை என்ன?

அரிவாளால் வெட்டப்பட்ட வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாகப் பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திருத்தணி ரயில் நிலையம் அருகே, நான்கு சிறார்கள் போதையில் அரிவாளால் வெட்டிய வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாகப் பரவும் செய்தி தவறானது. அவர் சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்டதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.

பரவிய செய்தி

#RIP #suraj #தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற தலைப்பு போய் தலை குனிந்து தமிழகமாக இன்று மாறி உள்ளது இதற்கு காரணம் திமுக அரசு தான் 

இவர் இறப்புக்கு தமிழகமே வெட்கி தலை குனிய வேண்டும்..

விடியல் ஆட்சியில் அவ லட்சணம்..

#justiceforsuraj #ShameOnYouMKStalin

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

திருத்தணியில் ஓடும் ரயிலில் வடமாநில இளைஞர் ஒருவரிடம் ரீல்ஸ் எடுப்பதாக சொல்லி நான்கு சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்நிலையில் அந்த வடமாநில இளைஞர் இறந்துவிட்டதாக புகைப்படத்துடன் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து தேடிப் பார்த்தோம். 

அப்போது புதிய தலைமுறை ஊடகத்தில் “வடமாநில தொழிலாளர் தாக்கப்பட்ட சம்பவம்.. ஐஜி அஸ்ரா கர்க் விளக்கம்” என்ற தலைப்பில், சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் செய்தியாளர்களை சந்தித்த வீடியோ இடம்பெற்றிருந்தது. அதில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கையெழுத்து போட்டு விட்டு, வடமாநில இளைஞர் வீட்டிற்கு சென்று விட்டாரா என்று ஐஜி அஸ்ரா கர்க்யிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். 


அதற்கு பதிலளித்த ஐஜி, அந்த வடமாநில இளைஞர் கையெழுத்துப் போட்டுவிட்டு தனது ஊருக்கு சென்றுவிட்டதாகவும், மருத்துமனையை தொடர்புக் கொண்டு அவர் நலமாக இருப்பதையும் உறுதிப்படுத்தி கொண்டோம் எனவும் தெரிவித்திருந்தார். 


இது குறித்து சன்நியூஸ் ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், வடக்கு மண்டல ஐ.ஜி. விளக்கமளித்திருந்தது பற்றி நியூஸ் கார்ட் வெளியாகியிருந்தது. அதிலும் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துவிட்டதாக தவறான தகவல் பரவுகிறது என்றும், அவர் சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார் எனவும் அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 


முடிவு: 

எனவே, திருத்தணி ரயில் நிலையம் அருகே, நான்கு சிறார்கள் போதையில் அரிவாளால் வெட்டிய வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாகப் பரவும் செய்தி தவறானது. அவர் சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்டதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க