யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு நிகழ்வுகளுக்காக, பல்வேறு ஊடகப் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூடிய கூட்டம் என்று கூறி பரவி வரும் புகைப்படத்தை தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
இசை வெளியீட்டு விழா நடைபெற்ற இடம் அருகே உள்ள சாலையில் ரசிகர்கள்! திரண்டு இருப்பதையும், அணிவருத்து நின்ற வாகளங்களையும் படத்தில் காணலாம்.

விரிவான விளக்கம்
மலேசியா கோலாலம்பூரில் டிசம்பர் 27ஆம் தேதி ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது அவ்விழாவுக்கு கூடிய கூட்டம் என்று கூறி வாகனங்கள் அணிவகுத்து நின்ற புகைப்படத்தை தினத்தந்தி நாளிதழில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதே போல் பல்வேறு சமூக ஊடகங்களிலும் இந்த புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.
Singapore to Malaysia immigration road look at the crowd 😳 only for ThalapathyVijay #JanaNayaganAudioLaunch Thiruvizhaa pic.twitter.com/Lh3LAGMXKh
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Johor Now என்ற ஊடகப் பக்கத்தில், ”The customs clearance systems at Singapore's Woodlands and Tuas checkpoints have returned to normal operation” என்ற தலைப்பில் பரவி வரும் புகைப்படத்துடன் மே 17, 2017 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் சிங்கப்பூர் உடலேண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடியால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ”Malaysia’s Border Problems” என்று குறிப்பிட்டு Murray Hunter என்ற இணையதளப்பக்கத்திலும், ஜூன் 05, 2021 அன்று பரவி வரும் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது.

அதே போல் “1 week toll exemption at Malaysia/Singapore borders from 1st of April” என்ற தலைப்பில் மார்ச் 31, 2022 அன்று Autobuzz என்ற ஊடகப்பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இடையேயான நில எல்லைகள் ஏப்ரல் 1, 2022 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளன என்றும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் இப்போது தங்கள் பயணத்திற்கு முன்போ அல்லது பின்போ தனிமைப்படுத்தல் அல்லது கோவிட் சோதனைகள் இல்லாமல் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே பயணிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, பரவி வரும் புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு நிகழ்வுகளுக்காக, பல்வேறு ஊடகப் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூடிய கூட்டம் என்று கூறி பரவி வரும் புகைப்படத்தை தவறாகப் பரப்பி வருகின்றனர்.