யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சித்தரிக்கப்பட்ட வீடியோவை, 'திருமணத்திற்கு முன்பு முன்னாள் காதலரை சந்தித்த மணப்பெண்' எனக் கூறி உண்மையான சம்பவம் போல் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
திருமணத்திற்கு முன் நடந்த ஒரு சந்திப்பு… சமூக வலைதளங்களில் தீவிர விவாதம்! மணப்பெண் திருமணத்திற்கு முன் முன்னாள் காதலரை சந்தித்த சம்பவம் – கடந்தகால உறவுகள் குறித்து மீண்டும் எழுந்த கேள்விகள். 🤔🔥இது தனிப்பட்ட சுதந்திரமா? அல்லது சமூக மரபுகளுக்கான சவாலா?
விரிவான விளக்கம்
திருமணத்திற்கு முன்பு முன்னாள் காதலரை சந்தித்த மணப்பெண் எனக் கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் திருமண கோலத்தில் இருக்கும் ஒரு பெண், காரில் இருந்து இறங்கி சென்று ஒரு இளைஞரை சந்திப்பது போன்றும், அழுது கொண்டே காரில் மீண்டும் ஏறுவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
If you’re so in love that you meet your ex on your wedding day and ignore the man you’re marrying, someone else’s life isn’t a backup plan. People can be cruel and selfish. Run away, but don’t ruin another life. Hope her husband is understanding. pic.twitter.com/ZFbeDs0LCV
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “chalte_phirte098“ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது. அதில் பரவி வரும் வீடியோ டிசம்பர் 13 அன்று பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
மேலும் “chalte_phirte098“ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் சுயவிவரத்தை ஆய்வு செய்ததில், பரவி வரும் வீடியோவைப் போன்றே பல வீடியோக்கள் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
பரவி வரும் வீடியோவில் உள்ள நபர், “இந்த வீடியோ உண்மையான சம்பவத்தை பிரதிபலித்து பதிவு செய்யப்பட்ட ஒரு போலி வீடியோ இது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த வீடியோ எடுக்கப்பட்டது” என்றும் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இதன் மூலம் சித்தரிக்கப்பட்ட வீடியோவை, 'திருமணத்திற்கு முன்பு முன்னாள் காதலரை சந்தித்த மணப்பெண்' எனக் கூறி உண்மையான சம்பவம் போல் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், 'திருமணத்திற்கு முன்பு முன்னாள் காதலரை சந்தித்த மணப்பெண்' எனக் கூறி பரவும் வீடியோ, ஒரு சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ என்பதை தெளிவாக அறிய முடிகிறது.