யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தியாவிலே ஒடிசா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதிக ஊதியம் வாங்குகிறார்கள்.
பரவிய செய்தி
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் தான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLAs) அதிகமான மாத சம்பளம் கொடுக்கப்படுகிறது.

விரிவான விளக்கம்
கர்நாடகா, குஜராத், மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியங்களை ஒப்பிட்டு, தமிழ்நாட்டில் தான் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகமாக மாத ஊதியம் பெறுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
*MLA* க்களின் மாத சம்பள விபரம்...
*கர்நாடகா* Rs.60,000
*சிக்கிம்* Rs.52,000
*குஜராத்* Rs.47,000
*கேரளா* Rs.42,000
*இராஜஸ்தான்* Rs.40,000
உத்தரகாண்ட்* Rs.35,000
ஒடிசா* Rs.30,000
மேகலாயா* Rs.28,000
அருணாச்சல பிரதேசம்* Rs.25,000
அசாம்* Rs.20,000
மணிப்பூர்* Rs.18,500
நாகலாந்து*… pic.twitter.com/eweD3f8KgK
உண்மை என்ன?
இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பது குறித்து தேடினோம்.
‘Odisha Bytes’ என்ற செய்தித்தளத்தில் வெளியான செய்தியிபன்டி, கடந்த 2025 டிசம்பர் 11ஆம் தேதி ஒடிசா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியத்தை மும்மடங்காக உயர்த்தியது. இதற்கு முன்னர் வரை 1.11 லட்சம் மாத ஊதியம் வாங்கி வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது மாதம் 3.45 லட்சம் ஊதியமாக பெறுகிறார்கள்.

டெல்லியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 90,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. அதேவேளையில் கேரளாவில் மாதம் 70,000 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.
தெலுங்கானா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 2.5 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த ஆண்டில் 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. தற்போது அவர்களின் மாத ஊதியம் 1.87 லட்சமாக உள்ளது. அதேபோல் கர்நாடகா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 1.60 லட்சமாக இருக்கிறது.

அதேவேளையில் தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ஊதியமாக 1,05,000 ரூபாய் வழங்கப்படுவதாக அதிகாரபூர்வ ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்தியாவிலே ஒடிசா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதிக ஊதியம் வாங்குகிறார்கள் என்பது தெரியவருகிறது. தமிழ்நாட்டை விட கர்நாடகா, தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகமாக ஊதியம் பெறுகிறார்கள் என்பதும் தெரிகிறது.
முடிவு:
இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLAs) அதிகமான மாத ஊதியம் வழங்கப்படுவதாக பரப்பப்படுவது தவறான தகவலாகும்.