YouTurn

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் தேவாலயத்தை சேதப்படுத்தியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

 ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் தேவாலயத்தை சேதப்படுத்தியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2025 பிப்ரவரி மாதம் வாட்டிகன் நகரத்தில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை ரோமானியா நாட்டைச் சேர்ந்தவர் சேதப்படுத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

உலகளாவிய ஆர்எஸ்எஸ் பயங்கரவாதம்!

அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் சங்கி அமைப்பை சேர்ந்தவன் தேவாலயத்தில் சிலைகளை உடைக்கும் பொழுது பிடிபட்டான்...


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

தேவாலயத்தில் புகுந்த நபர், அங்கேயுள்ள பொருட்களை சேதப்படுத்தும் வீடியோ காட்சியை பதிவிட்டு, ‘இந்த தேவாலயம் அமெரிக்காவில் உள்ளது. அதனை ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் ஒருவன் உடைத்து சேதப்படுத்துகிறான்’ என்று காங்கிரஸ் ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், ‘NDTV World’ என்ற ஆங்கில செய்தித்தளத்தில் இதுகுறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.


image.png


2025 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியின்படி, ‘வாட்டிகன் நகரத்தில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் புகுந்த ரோமானியா நாட்டை சேர்ந்த ஒருவர் அங்கிருந்த பழங்கால மெழுகுவர்த்தி ஏற்றும் விளக்குகளை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தியதாக’ தெரிய வருகிறது. இந்த மெழுகுவர்த்தி ஏற்றும் விளக்குகள் 31,000 டாலர் மதிப்பிலானது என்ற சொல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்களை அவர் பிடித்து அழைத்துச் சென்றனர்.


image.png


இது குறித்து ‘CNN’ ஆங்கில செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தியிலும் இதே தகவல்களை காணமுடிகிறது. மேலும், இது குறித்து வாட்டிகன் நகரத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ’இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மனிதன் தீவிரமான மனநல பிரச்சனையுடையவர் என்றும் வாட்டிகன் போலீஸ் அவரை கைது செய்துள்ளதாகவும்’ தெரிவித்தார். 


இதிலிருந்து இந்த சம்பவம் 10 மாதங்களுக்கு முன்னாள் வாட்டிகன் நகரத்தில் உள்ள  செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடந்தது என்பதும் தேவாலயத்தை சேதப்படுத்தியவர் ரோமானியா நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெளிவாக தெரியவருகிறது. 


முடிவு:


வாட்டிகன் நகரத்தில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை ரோமானியா நாட்டைச் சேர்ந்தவர் சேதப்படுத்திய பழைய வீடியோவை, அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் சேதப்படுத்தியதாக தவறாக பரப்பி வருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க