YouTurn

சோழ இளவரசி குந்தவையின் அரிய புகைப்படம் எனப் பரவும் நையாண்டிப் பதிவு !

சோழ இளவரசி குந்தவையின் அரிய புகைப்படம் எனப் பரவும் நையாண்டிப் பதிவு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

நையாண்டி

பரவிய செய்தி


மலேசிய நாட்டிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் சோழ இளவரசி குந்தவையின் ஒரே அரிய புகைப்படம்! ராஜராஜன் வழி வந்த ஹிந்து சொந்தங்களே இதை அதிகம் ஷேர் செய்து நம் சோழர்களின் பெருமையை நிலைநாட்டுங்கள்!



kundavai 1

விரிவான விளக்கம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சோழ நாட்டு இளவரசி குந்தவையின் அரிய புகைப்படம் மலேசியாவில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து கிடைத்துள்ளது என ஓர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சோழ இளவரசி குந்தவையின் ஓவியம் கூட இல்லை, அப்போது கேமரா ஏது எனப் பலரும் கமெண்ட் செய்து பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.

உண்மை என்ன ?

வைரலாகும் புகைப்படம் குறித்து இணையத்தில் தேடியபொழுது, அசத்தப்போவது யாரு, கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவர் இதனைத் தனது முகநூலில் முதன்முதலில் பதிவிட்டுள்ளார் என தெரியவந்தது.



நடிகர் வெங்கடேஷ் இதனை ஒரு நையாண்டி பதிவாகத் தான் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் இதனை உண்மை என நம்பி சிலர் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



இதேபோல், தஞ்சை பெருவுடையார் கோவில் கோபுரத்தையும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை வேடத்தில் வரும் த்ரிஷாவின் முடி அலங்காரத்தையும் ஒப்பிட்டு நையாண்டியாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் படம் பார்த்த பூரிப்பில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது சோழ நாட்டு இளவரசி குந்தவை என நம்பி சிலர் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அவர் பயன்படுத்திய புகைப்படம் குறித்து தேடுகையில், " ரெட்டிட்(Reddit) இணையத்தளத்தில் "1872ல் மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள மணப்பெண்" என்ற தலைப்பில் இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளது.



Website Link

மேலும், இந்தப் பதிவு சர்ச்சையான நிலையில், வெங்கடேஷ் ஆறுமுகம் தனது முகநூல் பக்கத்தில் இருந்து அந்தப் பதிவை நீக்கியுள்ளார்.

மேலும் படிக்க : #நாசா_வியந்தது என வைரலாகும் மீனாட்சி அம்மன் கோவில் பதிவு|உண்மை என்ன ?

இதேபோல், 2019ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் நாசா கண்காணித்த பொழுது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் என நையாண்டிப் பதிவு வைரலானது. அந்த பதிவையும் வெங்கடேஷ் ஆறுமுகமே பதிவிட்டு இருந்தார்.

முடிவு:

நம் தேடலில், மலேசியா நாட்டின் அருங்காட்சியத்தில் உள்ள சோழ இளவரசி குந்தவையின் அரிய புகைப்படம் என வைரலாகும் பதிவு தவறானது. அது நகைச்சுவை நடிகர் நையாண்டியாகப் பதிவிட்ட புகைப்படத்தை உண்மை என நம்பி பலர் பதிவிட்டு வருகின்றனர்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க