யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சித்தரிக்கப்பட்ட போலி வீடியோவை, ‘ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட TTR’ எனக் கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியை கற்பழித்தார் சனாதன முறைப்படி இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக ஒன்றிய அரசு TTR. ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறுபவர்களுக்கு இந்த புதுவித தண்டனை பற்றி எந்த கருத்தும் இதுவரை ஒன்றிய பாஜக அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவான விளக்கம்
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட ரயில் டிக்கெட் பரிசோதகர் (TTR) என்று கூறி 38 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில் இஸ்லாமியப் பெண் ஒருவரிடம் TTR சீருடையில் உள்ள ஒருவர் ரயிலில் உள்ள கழிப்பறைக்கு அழைத்து செல்வது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பதிவுகளில் "இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக ஒன்றிய அரசின் TTR இவ்வாறு தவறாக நடந்து கொண்டார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று மற்றொரு வீடியோவும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் இஸ்லாமிய தோற்றத்தில் இருந்த அதே பெண், அதே உடையில் ஹிஜாப் இல்லாமல் இருப்பது போன்றும் உள்ளது.
एक लड़की ने टिकट नहीं लिया तो रेलवे कर्मचारी हाथ पकड़ते हुए कुछ इस तरह पेश आया। 😯
शायद बाहर का रास्ता दिखा दिया, पैसे भी लिए। pic.twitter.com/0ipujMcGtJ
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோக்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் (Google Reverse Image Search) மூலம் தேடிப் பார்த்ததில், “official_rajthakur__“ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது.
அதில் “பரவி வரும் வீடியோ உண்மையாக நடந்த சம்பவம் அல்ல. விழுப்புணர்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோவே” என்று குறிப்பிட்டு செப்டம்பர் 24, 2025 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் பரவி வரும் வீடியோவில் நடித்துள்ள ராஜ் தாக்கூர் என்ற நபர் வேறொரு வீடியோ குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்திருப்பதைக் காண முடிந்தது. அதில், “பரவி வரும் வீடியோ உண்மையானதல்ல. அந்த குழந்தை என் மருமகன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாங்கள் அதைச் செய்தோம். எனவே, தயவுசெய்து அதற்கு எதிர்மறையான நோக்கில் பரப்ப வேண்டாம். அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில், இதுபோன்ற விழிப்புணர்வு வீடியோக்களை உருவாக்கும் முன், அதன் உண்மையான வீடியோவை அதனுடன் இணைப்பேன்“ என்றும் குறிப்பிட்டு அவர் பேசியிருந்தார்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
மேலும் பரவி வரும் வீடியோவைப் போன்றே பல போலியான வீடியோக்கள் அவரது பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், சித்தரிக்கப்பட்ட வீடியோவை, ‘ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட TTR’ எனக் கூறி சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.