YouTurn

வங்கிகளின் பெயரில் தனிப்பட்ட தரவுகளை கேட்டு அனுப்பப்படும் APK File-கள் மோசடியானது! எச்சரிக்கை!

வங்கிகளின் பெயரில் தனிப்பட்ட தரவுகளை கேட்டு அனுப்பப்படும் APK File-கள் மோசடியானது! எச்சரிக்கை!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

மோசடி

சரிபார்க்கப்பட்ட கூற்று

வங்கிகளின் பெயரில் APK File தரவிறக்கம் செய்யச் சொல்லி வாடிக்கையாளர்களது தனிப்பட்ட விவரங்களை கேட்டு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மோசடியானது.

பரவிய செய்தி

"உங்கள் KYC புதுப்பிக்கப்படவில்லை, அதனால் உங்கள் வங்கிக் கணக்கு இன்றே மூடப்படும். எனவே APK File-களில் KYC தரவுகளை நிரப்புங்கள்” - Bank of India.



விரிவான விளக்கம்

இந்தியாவில் உள்ள அரசுடைமை வங்கிகளில் ‘Bank of India’ வங்கியும் ஒன்று. சமீபத்தில், ‘Bank of India’ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியதாக ஒரு குறுஞ்செய்தி whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், ”அன்புள்ள வாடிக்கையாளரே, உங்களது தனிப்பட்ட விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்பதால் உங்கள் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கணக்கு இன்றே முடக்கப்படுகிறது. இந்த APK File மூலம் உங்கள் விவரங்கள் புதுபித்துக்கொள்ளுங்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



உண்மை என்ன?


‘Bank of India’ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்கும் படி ஏதெனும் அறிவுறுத்தியிருக்கிறதா என்று தேடினோம். அப்போது ’Guru Cyber Yodha’ என்ற வலைத்தளத்தில் 2025 ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. 


image.png


அதில், ‘இவ்வாறு தனிப்பட்ட விவரங்களை கேட்டு அனுப்பப்படும் செய்திகள் மோசடியை நோக்கமாக கொண்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ’மோசடிக்காரர்கள், உங்களது விவரங்கள் புதுப்பிக்கப்படவில்லை அதனால் உங்களது கணக்கு முடக்கப்படுவதாக குறுஞ்செய்தி அனுப்புவார்கள். அதனுடன் APK File-ஐ Install செய்யச் சொல்வார்கள். APK File-ஐ Install செய்ததும் உங்களது தொலைபேசி தீம்பொருளுக்கு (Malware) ஆட்பட்டுவிடும். இதனைக் கொண்டு வங்கி பரிவர்த்தனை தொடர்பான OTPகளை திருடமுடியும், உங்களுக்கு தெரியாமலே UPI பரிவர்த்தனை செய்யமுடியும், உங்கள் தரவுகள் திருடமுடியும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் தேடியபோது இது தொடர்பாக 2025 ஜனவரி மாதம் ‘Bank of Indiaவங்கியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அதில், ’‘Bank of India’ தனது வாடிக்கையாளர்களை எப்போதும் APK File-ஐ தரவிறக்கம் செய்யவோ அல்லது அதனை Install செய்யவோ சொன்னதில்லை. அதேபோல் தனிப்பட்ட தகவல்களையும் கேட்பதில்லை. அதனால் இதுபோன்ற செயலிகளை தரவிறக்கம் செய்யவேண்டாம்’ என்று எச்சரித்துள்ளது.


இதிலிருந்து, இந்த ‘Bank of India’ பெயரில் வலம் வரும் இந்த குறுஞ்செய்தி மோசடியானது என்பது நிரூபணமாகிறது.


முடிவு:


‘Bank of India’ பெயரில் APK File தரவிறக்கம் செய்யச் சொல்லி வாடிக்கையாளர்களது தனிப்பட்ட விவரங்களை கேட்டு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மோசடியானது. அவ்வாறான குறுஞ்செய்திகள் யாரும் நம்ப வேண்டாம்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க