YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

பாகிஸ்தான் அணியை தோற்கடித்த பின் இந்திய கிரிக்கெட் வாரியம் பதிவிட்டதாகப் பரவும் பழைய வீடியோ!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்த பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), தனது வலைதளப் பக்கத்த…

பொய்

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தைப் ஒட்டி பரப்பப்படும் புகைப்படம்!

இந்த புகைப்படத்தில் இருக்கும் மக்கள் இந்தியர்கள் அல்ல. இவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மக்கள்.

பொய்

அமெரிக்க காவலர்கள் இந்தியர்களை கை விலங்கிட்டு மனிதத்தன்மையற்ற முறையில் இழுத்துச் செல்வதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

’எல் சால்வடார்’ நாட்டில் ஒரு சிறையில் இருக்கும் கைதிகள் வேறொரு சிறைக்கு மாற்றப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் இரயில் பாதை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த இரயில்ப் பாதை சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள யான்போடு பகுதியில் அமைந்துள்ளது.

பொய்

குஜராத் சுங்கச்சாவடியில் ரகளையில் ஈடுபட்ட முஸ்லிம்கள் எனப் பரவும் வங்கதேச வீடியோ!

சரக்கு லாரியில் ஆட்களை ஏற்றி வந்த வாகனத்தை விரைவு சாலையில் அனுமதிக்காததால், சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வங்கதேசத்தில் ஏற்பட்ட பிரச்சனை.

பொய்

தைவான் நிலநடுக்கத்துடன் தொடர்புடைய வீடியோவை நேபாளம் எனத் தவறாகப் பரப்புகின்றார்!

இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சாய்ந்த கட்டிடம். பின்னாளில் இது இடிக்கப்பட்டது.

பொய்

பாகிஸ்தான் தூதர் கொல்லப்படுவதாகப் பரவும் கனடா விமான விபத்து வீடியோ!

இது கனடாவில் ஏற்பட்ட விமான விபத்தின் போது பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ.

பொய்

"இந்திய தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்” என்று மிரட்டிய ஓமான் நாட்டு இளவரசி! உண்மை என்ன?

இது பொய்யான தகவல் என்பது குறித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓமான் நாட்டு இளவரசி ‘சயீதா மோனா சைத்’ விளக்கமளித்துள்ளார்.

பொய்

வங்கதேசத்தில் இந்துக்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று துன்புறுத்தப்பட்டனரா?

இது பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின் இடையே ‘ஸுஹ்ர் தொழுகையில்’ ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ.

பொய்

EVM-க்கு எதிராக மகாராஷ்டிராவில் நடந்த போராட்டமெனப் பரவும் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட வீடியோ!

இவ்வீடியோ 2020-ம் ஆண்டு தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில், அந்நாட்டு அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது.

பொய்

இஸ்ரேல் தாக்குதலில் கைகளை இழந்த பாலஸ்தீனியரை ஹமாஸ் அமைப்புடன் தொடர்புப்படுத்திப் பரவும் பொய்!

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் தாக்குதலில் தியா அல்-அடினி என்ற சிறுவன் இரண்டு கைகளையும் இழந்துள்ளான். இதனை ஹமாஸ் அமைப்புடன் தொடர்புப்படுத்திப் பொய் செய்தி பரப்பப…

பரபரப்பான சரிபார்ப்புகள்