YouTurn

பாகிஸ்தான் தூதர் கொல்லப்படுவதாகப் பரவும் கனடா விமான விபத்து வீடியோ!

பாகிஸ்தான் தூதர் கொல்லப்படுவதாகப் பரவும் கனடா விமான விபத்து வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது கனடாவில் ஏற்பட்ட விமான விபத்தின் போது பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ.

பரவிய செய்தி

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகள் 3 பேர் ஐஇடி ஏற்றி வந்த பைக்கரால் மோதி வெடித்துக் கொல்லப்பட்டனர்

image.png

X link

விரிவான விளக்கம்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தாலிபான் படை வீரர்களுக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் இடையே நிலவும் எல்லை பிரச்சனை, இரண்டு நாடுகள் மீதான தாக்குதலாக மாற தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 3 பாகிஸ்தான் தூதர்களை ஏற்றிவந்த விமானத்தை வெடிக்கச்செய்து கொலை செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுக்கிறது. 


உண்மை என்ன?


பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், கடந்த டிசம்பர் 29-ம் தேதி ’தந்தி டிவி’ ஊடகத்தில் இதே வீடியோவுடன் செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. 



கனடா நாட்டில் உள்ள ஹாலிஃபேக்ஸ் (Halifax) விமானநிலையத்தில் ஏர் கனடா விமானம் தரையிறங்கும் போது இறக்கை ஓடுபாதையில் உரசித் தீப்பிடித்துள்ளது. அப்போது விமானத்திற்குள் இருந்த பயணிகள் அதனை வீடியோ எடுத்துள்ளனர். 


இந்நிகழ்வு குறித்து ’Economic Times’ ஊடகத்திலும் செய்தி வெளியாகியுள்ளது. லேண்டிங் கியர் பழுதானதால் இவ்விபத்து ஏற்பட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ’CNA’ ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் இதே வீடியோவுடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

image.png

இப்பொய் செய்தியைப் பரப்பியவரின் எக்ஸ் பதிவிற்கு யூடர்ன் பதிலளித்ததைத் தொடர்ந்து, வீடியோவை மாற்றிப் பதிவிட்டு விட்டதாகக் கூறி மற்றொரு வீடியோவை பதிவிட்டார். ஆனால், இதுவும் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்தது கிடையாது. 


கடந்த 2024ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தான் நாட்டில் ‘Khuzdar’ என்ற பகுதியில் பிரஸ் கிளப் தலைவர் முகம்மது சித்திக் என்பவர் வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைத்தான் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை பிரச்சனையுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர். 

image.png

இவற்றிலிருந்து ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை பிரச்சனையுடன் தொடர்புப்படுத்திப் பதிவிட்ட இரண்டு வீடியோக்களுக்கும் அவற்றுடன் தொடர்பில்லாதவை என்பதை உறுதி செய்ய முடிகிறது.


முடிவு:


ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரைக் கொலை செய்யும் காட்சி எனப் பரப்பப்படும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது கனடாவில் ஏற்பட்ட விமான விபத்தின் போது எடுக்கப்பட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க