யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்முறையாக FIFA மகளிர் உலகக் கோப்பை சாம்பியனானது. இதிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் FIFA World Cup இரண்டையும் வென்ற உலகின் முதல் நாடு ஜெர்மனி என்பதை அறியமுடிந்தது.
பரவிய செய்தி
கால்பந்து வரலாற்றில் ஆண்கள், பெண்கள் உலகக்கோப்பையை வென்ற முதல் நாடு என்ற புதிய சாதனை படைத்த ஸ்பெயின். 3 ஆண்டுகளில் இரு உலகக்கோப்பை மகுடம் சூடிய ஸ்பெயின்

விரிவான விளக்கம்
FIFA உலகக்கோப்பை கால் பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி 16 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் அணி கைப்பற்றியது.
இந்த நிலையில், ஸ்பெயின் அணி ஆண்கள் மற்றும் பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடு என்று தந்திடிவி ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
16 Years
நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி 16 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்
கால்பந்து வரலாற்றில் ஆண்கள், பெண்கள் உலகக்கோப்பையை வென்ற முதல் நாடு என்ற புதிய சாதனை படைத்த ஸ்பெயின். 3 ஆண்டுகளில் இரு உலகக்கோப்பை மகுடம் சூடிய ஸ்பெயின்#Messi… pic.twitter.com/PTmrWcNPRC
உண்மை என்ன?
FIFA உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி தான் ஆண்கள் மற்றும் பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது FIFAவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் 1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது.

அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்முறையாக FIFA மகளிர் உலகக் கோப்பை சாம்பியனானது. இதிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் FIFA World Cup இரண்டையும் வென்ற உலகின் முதல் நாடு ஜெர்மனி என்பதை அறியமுடிந்தது.

முதலில் west germany என்ற பெயரில் ஆடிய இந்த அணி, பின்னர் ஜெர்மனி என்று பெயர் மாற்றப்பட்டு, 2014ஆம் ஆண்டு FIFA World Cup பட்டத்தை வென்றது. இதை வைத்து பார்க்கும் போதும் ஆண்கள் மற்றும் பெண்கள் FIFA World Cup இரண்டையும் வென்ற உலகின் முதல் நாடு ஜெர்மனி தான் என்பதை உறுதி செய்யமுடிந்தது.

அதே சமயம், 2023ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பையில் ஸ்பெயின் வெற்றி பெற்றதன் மூலம், 2026ல் ஆண்கள் உலகக் கோப்பையையும் தற்போது வென்றுள்ளதால், ஆண்கள் மற்றும் பெண்கள் FIFA World Cup பட்டங்களை ஒரே நேரத்தில் (simultaneously) வைத்திருந்த முதல் நாடு என்ற புதிய சாதனையை ஸ்பெயின் தற்போது படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
எனவே, 2026ல் வெற்றி பெற்றதன் மூலம் ஸ்பெயின் அணி தான், ஆண்கள் மற்றும் பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது என்று தந்திடிவி ஊடகம் வெளியிட்ட செய்தி திரிக்கப்பட்டவை என்பது உறுதியானது.