யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
"ஹாஸ்டல் வந்து மாணவர்களிடம் ஒரு முதல்வர் பேசுவதை நான் முதல் முறையாக இப்போ தான் பார்க்கிறேன்" - எம். சி. ராஜா சமூக நீதி விடுதியில் முதல்வர் ஆய்வு செய்தது குறித்து அமைச்சர் வன்னியரசு

விரிவான விளக்கம்
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் ஜூலை 17 அன்று திடீர் ஆய்வு செய்தார். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னியரசு, சமூகநீதி விடுதிகளில் மாணவர்களிடம் ஒரு முதல்வர் வந்து பேசுவதை நான் முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
அமைச்சர் வன்னியரசு கூறியது போல், இதற்கு முன்பு இருந்த எந்த முதல்வரும் சமூகநீதி விடுதிகளில் ஆய்வு செய்யவில்லையா என்பது குறித்து தேடினோம்.
அப்போதுதினத்தந்தி ஊடகத்தில், “திருவாரூரில் சமூகநீதி விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு” என்று குறிப்பிட்டு ஜூலை 10, 2025 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் திருவாரூர். எஸ்.எஸ்.நகர் செல்லும் வழியில், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதிகளுக்கு அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று கடந்த ஆண்டு காரைக்குடியில் உள்ள விடுதிக்கு சென்று அவர் மாணவிகளுடன் கலந்துரையாடியுள்ளதையும் தெளிவாகக் காண முடிகிறது.
முடிவு:
எனவே, சமூகநீதி விடுதிகளில் மாணவர்களிடம் ஒரு முதல்வர் வந்து பேசுவதை நான் முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறேன் என்று அமைச்சர் வன்னியரசு கூறிய தகவல் தவறானவை. இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதி விடுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.