YouTurn

ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் இரயில் பாதை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் இரயில் பாதை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த இரயில்ப் பாதை சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள யான்போடு பகுதியில் அமைந்துள்ளது.

பரவிய செய்தி

இமயமலை மீது ரிஷிகேஷில் இருந்து கர்ணபிரயாகை இரயில். அதிசய கண்கொள்ளா காட்சியை காணுங்கள்

விரிவான விளக்கம்

நீர்ப்பரப்பை ஒட்டியுள்ள ஒரு மலையின் வரிசையான குன்றுகளில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் இரயில் ஒன்று செல்லும் வீடியோவை கொண்டு, ‘ரிஷிகேஷில் இருந்து கர்ணபிரயாக் செல்லும் இந்த இரயில் பாதை இமயமலையில் அமைக்கப்பட்டுள்ளதாக ’WhatsApp-ல் பரப்பப்படுகிறது. 


https://x.com/i/web/status/1882846934605730144


உண்மை என்ன:

பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Mei Mei’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில் குறிப்பிட்டுள்ளதைக் கொண்டு இந்த இரயில்பாதை சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ’யான்போட்’ பகுதியில் அமைந்துள்ளது என்று தெரிகிறது.

மேலும் தேடியதில் ‘Rex Explorer’ என்ற யூட்யூப் தளத்தில் “The Majestic Train Journey Through China's Tunnels” என்ற தலைப்பில் இந்த காட்சிகளை உள்ளடக்கிய நீண்ட வீடியோவைக் காண முடுந்தது. 

இதிலிருந்து இந்த இரயில்பாதை சீனாவின் ஹுனான் மாகாணத்தில் என்பது உறுதியாகிறது.

மேலும் ‘Business Standard’ செய்தித்தளம் வெளியிட்டுள்ளது செய்தியில், ‘2026ஆம் ஆண்டின் இறுதியில்தான் ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வரும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி’ கூறினார் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதிலிருந்து  ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் பாதை இன்னும் கட்டிமுடிக்கப்படவே இல்லை என்பது தெளிவாகிறது.

முடிவு:

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள யான்போட் பகுதியில் அமைந்துள்ள இரயில் பாதையை இமயமலையில் அமைந்துள்ள ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் பாதை என்று தவறாக பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க