யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்த பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவைப் பாருங்கள் என்று கூறி 41 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது
பரவிய செய்தி
நேற்று பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்த பிறகு இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு தங்களுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்ட வீடியோ. பார்த்தவர் மனதில் நிற்கும் காட்சி.

விரிவான விளக்கம்
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் மூன்று நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி முன்னதாகவே அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படலாம் என்பதை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்த பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவைப் பாருங்கள் என்று கூறி 41 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், இந்திய கிரிக்கெட் அணியினர் வெற்றிக் களிப்புடன் மைதானத்தை சுற்றி வருவதையும், மைதானத்தில் வந்தே மாதரம் என்ற பாடல் ஒலிப்பெருக்கியில் ஒலிப்பதையும் தெளிவாகக் பார்க்க முடிகிறது.
நேற்று பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்த பிறகு இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு தங்களுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்ட வீடியோ.
#GetOutStalin #dmkfails #NadodiMannan #gobackstalin #GoBackStalin #Annamalai #BJP #MkStalin #Udhayanidhi pic.twitter.com/qNz7G8572M
பார்த்தவர் மனதில் நிற்கும் காட்சி...
நேற்று பாகிஸ்தான்
அணியை வறுத்தெடுத்த
பிறகு இந்திய கிரிக்கெட்
கண்ட்ரோல் போர்டு
தங்களுடைய வலைதள
பக்கத்தில் பதிவிட்ட
வீடியோ பார்த்தவர்
மனதில் நிற்கும் காட்சி...pic.twitter.com/a0nttCyVsC
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் தொடர்புடைய வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
“Telegraph India” ஊடகம், பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகளைக் குறிப்பிட்டு தனது வலைதளப் பக்கத்தில் கடந்த 2024 ஜூலை 05 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் வென்ற இந்திய அணி, மைதானத்தை சுற்றி வந்த போது, ஒலிபெருக்கிகளில் வந்தே மாதரம் பாடல் முழங்கியது என்றும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அந்த போட்டி, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று “Indian Cricket Team” ஃபேஸ்புக் பக்கத்தில், கடந்த 2024 ஜூலை 04 அன்று, பரவி வரும் இதே வீடியோவை “ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 “ என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தனர்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்த பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ, 2024 இல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகிறது.

முடிவு:
நம் தேடலில், ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் தொடர்புபடுத்தி தவறாகப் பரப்புகின்றனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.