YouTurn

அமெரிக்க காவலர்கள் இந்தியர்களை கை விலங்கிட்டு மனிதத்தன்மையற்ற முறையில் இழுத்துச் செல்வதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

அமெரிக்க காவலர்கள் இந்தியர்களை கை விலங்கிட்டு மனிதத்தன்மையற்ற முறையில் இழுத்துச் செல்வதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

’எல் சால்வடார்’ நாட்டில் ஒரு சிறையில் இருக்கும் கைதிகள் வேறொரு சிறைக்கு மாற்றப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

அமெரிக்க நாய்கள் சங்கி நாய்களுக்கு செய்த கைமாறு, டிரம்ப்புக்காக யாகம் வளர்த்த பொறம்போக்குகள் இதை பார்க்கட்டும்


image.png


X Link

விரிவான விளக்கம்

கடந்த பிப்ரவரி 5 அன்று, அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாகச் சொல்லி 104 இந்தியர்களை அமெரிக்க அரசு இராணுவ விமானத்தின் மூலம் இந்தியா திருப்பி அனுப்பியது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற இரண்டு வாரத்திற்கு உள்ளாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த திருப்பி அனுப்பும் விமான பயணத்தின் போது சுமார் 40 மணிநேரம் இந்தியர்களின் கை கால்களில் விலங்கு (Handcuffs) மாட்டி அழைத்துவரப்பட்டுள்ளனர்.  மேலும், இந்த பயணத்தின் போது கழிவறை செல்வதற்கும், உணவு உண்பதற்கும் கூட இந்தியர்கள் விலங்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இவ்வாறு அமெரிக்க அரசாங்கத்தால் மனிதத்தன்மையற்ற முறையில் இந்தியர்கள் நடத்தப்பட்டது நாடு முழுவதும் பேசு பொருளானது. 


இந்நிலையில், முதுகிற்குப் பின்னால் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் ஆண்களை வரிசையாகக் காவலர்கள் இழுத்துச் செல்லும் காணொளியைப் பதிவிட்டு, டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று விரும்பிய பாஜக ஆதரவாளர்களை அமெரிக்கா இவ்வாறு மனிதத்தன்மையற்ற முறையில் நடத்துவதைப் பாருங்கள் என்று சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள்.

https://x.com/i/web/status/1889327568643559794

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘Reuters’ செய்தி முகமையின் யூட்யூப் பக்கத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. அதன்படி, இந்த காணொளியில் 'எல் சால்வடார்’ நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சந்தேகத்திற்குரிய குற்றக் கும்பல் உறுப்பினர்களில் ஆயிரக்கணக்கானோரைப் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ‘Mega Prison’ என்னும் வேறொரு சிறைக்கு அனுப்பி வைக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரிய வருகிறது. 


image.png


’BORDER REPORT’ என்ற செய்தித்தளம் முதல்கட்டமாக 2000 கைதிகள் ‘Mega Prison’ சிறைக்கு அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.


’எல் சால்வடார்’ நாட்டின் ஜனாதிபதி நஜிப் புக்கேலே ‘குற்ற கும்பலுக்கு எதிரான போர்’ என்று கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரகடனப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். மேலும், ’எல் சால்வடார்’ நாட்டில் அவசரநிலை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  ‘குற்றக் கும்பலுக்கு எதிரான போர்’ என்பதன் பெயரில் அந்நாட்டில் இதுவரை 68,000 மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறைப்படுத்தப்பட்ட தங்களது உறவினர்கள், நெருக்கமானவர்கள் பற்றி ஏதும் அறிய முடியாத நிலையில் அந்நாட்டு மக்கள் இருக்கிறார்கள்.


image.png


‘பயங்கரவாத எதிர்ப்பு மையம்’ என்ற பெயரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சிறைதான் இந்த  ‘Mega Prison’. இதில் 40,000 கைதிகள் வரை அடைத்து வைக்க முடியுமென்று சொல்லப்படுகிறது. 


இதிலிருந்து, இந்த வீடியோவில் நாம் காண்பது, ’எல் சால்வடார்’ நாட்டில் சிறைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பவர்கள் புதிய சிறைக்கு மாற்றப்படும் காட்சியைத்தான் என்பது தெளிவாகிறது.


முடிவு:


’எல் சால்வடார்’ நாட்டில் ஒரு சிறையில் இருக்கும் கைதிகள் வேறொரு சிறைக்கு மாற்றப்படும் காட்சியை, அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களைத் திருப்பி அனுப்பிய விவகாரத்துடன் இணைத்து தவறாகப் பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க