யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோவில் இருப்பது முத்தையா முரளிதரன் கிடையாது. நடனக் கலைஞர் கிரண்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஸ்ரீலங்கா முன்னால் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நடனம் ஆடுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
முத்தையா முரளிதரன் எனப் பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், இதே வீடியோ கடந்த ஜூலை 22ம் தேதி ‘Kiran Jopale’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது.
அப்பதிவில் ’Thank you Bangalore’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்கொண்டு அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே போன்று பல நடன வீடியோக்கள் இருப்பதையும் காண முடிகிறது.

மேலும் நடனம் ஆடியவரின் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களின் லிங்கும் அதில் இடம் பெற்றிருந்தது. அவரது பேஸ்புக் பக்கத்தில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் ’studio lokal’ என்ற பெயரில் நடனப் பயிற்சி அளித்து வருகிறார்.

நடன பயிற்சியாளர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வீடியோவை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் எனத் தவறாகப் பரப்புகின்றனர் என்பது இதிலிருந்து அறிய முடிகிறது.
முடிவு:
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நடனம் ஆடியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அந்த வீடியோவில் இருப்பவர் நடனக் கலைஞர் கிரண்.
