YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

பெரியார் பற்றிய சீமானின் சர்ச்சை கருத்து குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

வேறொரு சந்தர்ப்பத்தில் எடிப்பாடி பழனிச்சாமி ஊடகங்களிடம் பேசியதை, தற்போது பெரியார் பற்றிய சீமானின் சர்ச்சைப் பேச்சுடன் இணைத்து போலியாக உருவாக்கப்பட்ட video News…

பொய்

ராகுல் காந்தி அணிந்துள்ள ஷூ-வின் விலை 3 லட்சமா? உண்மை என்ன?

அந்நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் அனைத்து பொருட்களின் விலையும் 3 லட்சம் எனத் தவறாக உள்ளது. பிறநாட்டு தளங்களுடன் ஒப்பிடுகையில் இதனை உறுதி செய்ய முடிகிறது.

பொய்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானது பற்றி கருத்து கூறினாரா திருச்சி சிவா? உண்மை என்ன?

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து திருச்சி சிவா பேசியதாக அப்படியொரு செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என்று தந்தி டிவி, மாலை முரசு செய்திகள் ஆகிய…

தவறானது

பாஜக MP கீழே தள்ளிவிடப்பட்டது குறித்து ராகுல் காந்தி திமிர்தனமாக பேசியதாக பரப்பப்படும் வீடியோ!

’நாங்கள் கீழே தள்ளிவிடப்படுவதால் எங்களுக்கு ஒன்றும் ஆகாது’ என்று ராகுல் காந்தி பேசியதை திரித்து "ஒருவரை கீழே தள்ளி விடுவதால் அவருக்கு ஒன்றும் ஆகாது" என்று தவறா…

பொய்

இந்துக்கள் பாதிக்கப்படுவது குறித்து பிரியங்கா காந்தி குரல் கொடுப்பதில்லை எனப் பரவும் தவறான தகவல்!

பாலஸ்தீன மக்கள் மட்டுமின்றி வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் பிரியங்கா காந்தி குரல் எழுப்பியுள்ளார்.

தவறானது

’புகார் அளித்தவரையே கைது செய்த காவல்துறை’ - அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் பொய் செய்தி!

அசோக் ஸ்ரீநிதி அளித்த புகாரின் அடிப்படையில் முகமது இப்ராஹிம் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியு…

தவறானது

‘பலாத்கார போராட்டம்’ என்றால் என்ன? அர்த்தம் தெரியாமல் அவதூறு பரப்பும் ‘இளைய பாரதம்’!

பலாத்காரம் என்றால் ‘வன்முறை’ என்ற பொருளும் உள்ளது. அந்த அர்த்தத்தின் அடிப்படையில் ’வன்முறை போராட்டம்’ என்று தான் ஸ்டாலின் பேசியுள்ளார்.

பொய்

மகாராஷ்டிராவில் விசிகவினர் கலவரத்தில் ஈடுபட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

மகாராஷ்டிராவின் பர்பானி பகுதியில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து ’குடியரசு சேனா’யால் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது எட…

தவறானது

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.30 லட்சம் பேர் நீக்கப்பட்டது ஏன்?

இறப்பு, அரசுப் பணி, வருமானம், நிலம் வாங்கியது போன்ற காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தவறானது

விஜய் அதிமுகவை வீழ்த்திவிட்டதாக அட்டைப்படம் வெளியிட்டதா விகடன்?

2018ஆம் ஆண்டு, ‘சர்கார்’ திரைப்படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிகழ்வை ஒட்டி விகடன் வெளியிட்ட படம் இது.

தவறானது

ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டாமல் பரிசோதனை செய்தாரா அன்புமணி? உண்மை என்ன?

வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி (Edit) தவறாகப் பரப்புகின்றனர்.

தவறானது

ஆந்திர அரசு வக்ஃப் வாரியத்தைக் கலைத்து விட்டதாகப் பரவும் தவறான தகவல்!

வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக 2023-ல் வெளியிடப்பட்ட அரசாணை மட்டுமே திரும்பப்பெறப்பட்டுள்ளது. மீண்டும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வக்ஃப் வாரியம…

பரபரப்பான சரிபார்ப்புகள்