YouTurn

ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டாமல் பரிசோதனை செய்தாரா அன்புமணி? உண்மை என்ன?

ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டாமல் பரிசோதனை செய்தாரா அன்புமணி? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி (Edit) தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

சின்னய்யா.. ஸ்டெதஸ்கோப் கொஞ்சம் காதுல வைங்..

anbumani stethoscope

X link


விரிவான விளக்கம்

ஃபெங்கல் புயலினால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகி மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்துக்குட்பட்ட கண்டக்காடு, விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட தேவனூா் கிராமங்களில் பாமக சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்களுக்குச் சிகிச்சை அளித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது ஸ்டெதஸ்கோப்பை (Stethoscope) காதில் மாட்டாமலேயே அன்புமணி பரிசோதனை செய்ததாக வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?


பரவக் கூடிய புகைப்படம் மற்றும் வீடியோவில் ‘மின்னம்பலம்’ ஊடகத்தின் லோகோ இருப்பதைக் காண முடிகிறது. இதனைக் கொண்டு அவர்களது யூடியூப் பக்கத்தில் ஆய்வு செய்தோம். 


பாமக சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமை அன்புமணி தொடங்கி வைத்த வீடியோ நேற்றைய தினம் (டிச.8) மின்னம்பலம் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அன்புமணி நிகழ்ச்சியை தொடங்கி வைப்பது, மக்களை மருத்துவ பரிசோதனை செய்வது, செய்தியாளர்களைச் சந்திப்பது என சுமார் 37 நிமிடம் கொண்ட அவ்வீடியோவின் கடைசியில் (35:40) பரவக் கூடிய வீடியோ தொடர்பான காட்சியைக் காண முடிகிறது. 



முகாமிலிருந்த மருத்துவர் ஒருவர் சிறுவன் ஒருவனுக்கு ஸ்டெதஸ்கோப் மூலம் பரிசோதனை செய்யச் சொல்லி அன்புமணியிடம் அழைத்து வருகிறார். முகாம் நடைபெறும் இடத்திலிருந்து கிளம்புவதற்காக எழுந்த அன்புமணி அச்சிறுவனின் இதயத் துடிப்பைப் பரிசோதிக்கிறார். 

பரிசோதனையின் போது ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டாமல் இருந்ததை உணர்ந்த அன்புமணி, பிறகு காதில் மாட்டி சிறுவனைப் பரிசோதனை செய்வதை வீடியோவில் காண முடிகிறது. மேலும் சிறுவனுக்குப் பரிசோதனை செய்வதற்கு முன்னர் 3 பேருக்குப் பரிசோதனை செய்தார். அப்போது ஸ்டெதஸ்கோப்பை சரியாக காதில்தான் மாட்டியுள்ளார். 


மேற்கண்ட நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி (Edit) அன்புமணி ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டாமல் பரிசோதனை செய்ததாகத் தவறாகப் பரப்புகின்றனர். 


முடிவு: 


ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டாமல் அன்புமணி பரிசோதனை செய்ததாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டாமல் இருந்ததை உணர்ந்த அன்புமணி, பிறகு காதில் மாட்டி சிறுவனைப் பரிசோதனை செய்துள்ளார். வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி (Edit) தவறாகப் பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.