YouTurn

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பரவிய செய்தி

நீட் தேர்வுக்கு எதிராக தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து போராட முயற்சித்த பாடகர் தெருக்குரல் அறிவை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து,  தெருக்குரல் அறிவை அழைத்து வர உத்தரவிட்டு முதலமைச்சர் விஜய் அவரை சந்தித்தார்.



Polimer News


News தமிழ்



Polimer News Card


விரிவான விளக்கம்

கடந்த மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவை காரணமாக காட்டி ஒன்றிய அரசால் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடந்தப்பட்டது. இந்த வினாத்தாள் கசிவு, மறுதேர்வு காரணமாக மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியா முழுவதும் 12 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்​திர பிர​தான் பதவி விலகவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் கடுமையாக போராடி வருகிறார்கள். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல்துறை, துணை இராணுவப்படையினர் கடுமையாக தாக்கினர்.


இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடந்துவருகிறது. அந்த வகையில், பாடகர் தெருக்குரல் தலைமைச் செயலகம் முன்பு நீட் தேர்வுக்கு எதிராக போராட முயற்சித்தார். காவல்துறை அவரை பிடித்து வாகனத்தில் அழைத்துச் சென்றது. ஆனால் காவல்துறையால் பிடித்துச் செல்லப்பட்ட சற்று நேரத்திலே தெருக்குரல் அறிவை வரவழைத்து முதல்வர் விஜய் சந்தித்ததாக ’பாலிமர்’, ’News தமிழ்’ உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





உண்மை என்ன?


இந்த விவகாரம் தொடர்பாக தேடியபோது ’தெருக்குரல் அறிவு’ தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவைக் காணமுடிந்தது. 



அதில், ‘டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையை உடனே நிறுத்தவும், அந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஆதரவு கொடுக்கவேண்டும் என்றும் கோரி ஜூலை 21ஆம் தேதி தலைமை செயலகம் முன்பு குரல் கொடுத்தேன். நீட் காரணமாக நாம் ஏற்கனவே பல இளம் உயிர்களை இழந்துவிட்டோம். நீட் தேர்வை மொத்தமாக ஒழிக்க தமிழ்நாடு அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஜூலை 21 அன்று நான் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்தேன். போராடும் மாணவர்கள் மீது வன்முறையை பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று வலியுறுத்தினேன். நான் முதல்வரை சந்திக்கவில்லை. நான் முதல்வரை சந்தித்ததாக ஊடக செய்திகள் சொல்லும் நிலையில் இதை நான் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்’ என்று தெருக்குரல் அறிவு குறிப்பிட்டுள்ளார். 


இதில் ‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை’ என்று தெருக்குரல் அறிவு தெளிவாக குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம்.


முடிவு:


நீட் தேர்வை ரத்துக் கோரி செய்ய தலைமைச் செயலகம் முன்பு போராட முயற்சித்த பாடகர் தெருக்குரல் அறிவை அழைத்து வர உத்தரவிட்டு முதல்வர் விஜய் அவரை சந்தித்ததாக ’பாலிமர்’, ’News தமிழ்’ உள்ளிட்ட ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளன.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க