YouTurn

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பரவிய செய்தி

’கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்தான்’ - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.


X Link


விரிவான விளக்கம்

கடந்த ஜூலை 21ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், ‘கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தமிழ்வழிக் (Tamil Medium) கல்வியில் படித்தவர்தான்’ என்று குறிப்பிட்டார்.



உண்மை என்ன?


கூகுள் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சையின் பள்ளிக்கல்வி குறித்த தகவல்களை இணையத்தில் தேடியபோது, ‘Times of India’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியில் சுந்தர் பிச்சையின் வாழ்க்கை குறிப்புகளைக் காணமுடிந்தது.


image.png


அதன்படி, ’மதுரையில் பிறந்தவராக இருந்தாலும் சுந்தர் பிச்சை சென்னை அசோக் நகரில் தான் வளர்ந்திருக்கிறார். ஜவகர் வித்யாலயா என்னும் CBSE பள்ளியிலும் பின்னர் சென்னை IIT வளாகத்தில் உள்ள ’வனவாணி பள்ளி’யிலும் அவர் பள்ளிக்கல்வி பயின்றதாக’ தெரியவருகிறது. இந்த  வனவாணி பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தான் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


image.png


அதேபோல் ’The Hindu’ செய்தித்தளத்தில் உள்ள ஒரு செய்தியில், சுந்தர் பிச்சை சென்னை அசோக் நகரில் உள்ள ஜவகர் வித்யாலயா பள்ளியில் 1979 முதல் 1987 வரையில் படித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது CBSE பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார் என்பது தெரிவருகிறது. 


முடிவு:


கூகுள் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை தமிழ்வழிக் கல்வியில் படித்ததாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தவறான தகவலை பரப்புகிறார். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க