YouTurn

விஜய் அதிமுகவை வீழ்த்திவிட்டதாக அட்டைப்படம் வெளியிட்டதா விகடன்?

விஜய் அதிமுகவை வீழ்த்திவிட்டதாக அட்டைப்படம் வெளியிட்டதா விகடன்?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

2018ஆம் ஆண்டு, ‘சர்கார்’ திரைப்படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிகழ்வை ஒட்டி விகடன் வெளியிட்ட படம் இது.

பரவிய செய்தி

52 வருடங்களாக அரசியலில் உள்ள, 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த, 25% நிரந்தர வாக்கு வங்கி உள்ள, அதிமுக என்ற மிகப்பெரிய கட்சியை..., அரசியலில் Pre-KGயில் சேர்ந்துள்ள கள்ள சினிமா டிக்கெட் விஜய் முடித்துவிட்டதாக அட்டைப் படம் போட்டுள்ளது '" விகடன்.!



 X Link

விரிவான விளக்கம்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடக்கி அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தையொடி, தவெக தலைவர் விஜய்-யை தலைமையாக கொண்டு விகடன் பதிப்பகம் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவை நடத்தியது. 


இந்நிலையில், ’52 வருடங்களாக அரசியலில் இருக்கும் அதிமுகவை, அரசியலுக்கு புதிதாக வந்துள்ள விஜய் வீழ்த்திவிட்டதாக’ கருத்தை ஏற்படுத்தும் வகையில் விகடன் அட்டைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக ’எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.


https://x.com/i/web/status/1865676023674646849


உண்மை என்ன:


பரப்பப்படும் படத்தை அடிப்படையாகக் கொண்டு இணையத்தில் தேடியதில், விகடன் குழுமத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ கணக்கில், 2018 நவம்பர் 9 அன்று இந்த படம் பதிவிடப்பட்டிருப்பதை காணமுடிந்தது.


அந்தப் பதிவில் கூடுதலாக ‘#Sarkar #ADMKProtest’ என்ற Hashtagகள் இருப்பதைக் காண்கிறோம். 



இதனை அடிப்படையாக கொண்டு மேலும் தேடுகையில், ’சர்கார் திரைப்படத்தில் அ.தி.மு.க அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  கோமளவல்லி என்ற ஜெயலலிதாவின் இயற்பெயரை திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்திற்கு பயன்படுத்தி ஜெயலலிதாவின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் காட்சியமைக்கப்பட்டிருப்பதாகவும்’ கூறி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மதுரையில்  சர்கார் திரைப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய செய்தியைக் காணமுடிந்தது.



இதிலிருந்து, விகடன் வெளியிட்டுள்ள இந்தப்படம் 2018 ஆண்டு வெளியிடப்பட்ட பழைய ஒன்று என்பதும், அது ’சர்கார்’ திரைப்படம் வெளியான போது அதனை எதிர்த்து அதிமுகவினர் நடத்திய போராட்டங்களைக் பின்னணியாகக் கொண்டு வெளியிடப்பட்டதென்பதும் உறுதியாகிறது. 


முடிவு:


இது 2018 ஆம்  ’சர்கார்’ திரைப்படத்தையொட்டி அதிமுகவினர் நடத்திய போராட்டங்களை பின்புலமாகக் கொண்டு வெளியிட்டப்பட்ட பழைய படமாகும். இதனை திரித்து ‘அரசியலில் அனுபவம் உள்ள அதிமுகவை விஜயின் புதிய கட்சி வீழ்த்தியது’ என்ற கருத்தோட்டத்தில் விகடன் வெளியிட்டதாக தவறாக பரப்பப்படுகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.