யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பாலஸ்தீன மக்கள் மட்டுமின்றி வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் பிரியங்கா காந்தி குரல் எழுப்பியுள்ளார்.
பரவிய செய்தி
பிரியங்கா வயநாடு ஓடுனது இதுக்குதான் எப்போதும் முஸ்லிம்கள் மேல் தான் அதிக அக்கறை பங்களாதேஷில் இருக்கும் இந்துக்கள் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டு தொடர்ந்து படுகொலைகளும் கற்பழிப்புகளும் நடந்து கொண்டுள்ளன. ஆனால் அதற்கு கொஞ்சம் கூட ஒரு கருணை, இறக்கம் காட்ட மாட்டார்கள்,,

விரிவான விளக்கம்
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அம்மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி பை ஒன்றை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு சென்றார்.
பிரியங்கா வயநாடு ஓடுனது இதுக்குதான் 😂
எப்போதும் முஸ்லிம்கள் மேல் தான் அதிக அக்கறை
பங்களாதேஷில் இருக்கும் இந்துக்கள் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டு தொடர்ந்து படுகொலைகளும் கற்பழிப்புகளும் நடந்து கொண்டுள்ளன
ஆனால் அதற்கு கொஞ்சம் கூட ஒரு கருணை, இறக்கம் காட்ட மாட்டார்கள்,, pic.twitter.com/K9sADWfT41
அந்த புகைப்படத்தைப் பதிவிட்டு, முஸ்லிம்களுக்கு ஆபத்து என்றால் மட்டும் பிரியங்கா காந்தி குரல் கொடுக்கிறார். வங்கதேசத்தில் பாதிக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவாகப் பேச மாட்டார் என வலதுசாரிகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன?
கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமெனக் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ‘மோடி - அதானி’ படங்கள் அச்சடிக்கப்பட்ட பையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நூதனமான போராட்டத்தைக் கடந்த 10ம் தேதி முன்னெடுத்தனர்.
![]()
பிறகு டிசம்பர் 16ம் தேதி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, ’பாலஸ்தீனம்’ என அச்சடிக்கப்பட்ட பையைக் கொண்டுவந்தார்.

அதற்கடுத்த நாளான டிசம்பர் 17ம் தேதி வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலில் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் வகையில் பை கொண்டுவந்துள்ளார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வங்கதேசத்தில் பாதிக்கப்படும் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக போராட்டமும் செய்துள்ளனர். இது தொடர்பான செய்திகளும் வெளியாகியுள்ளது.
#WATCH | Delhi: Opposition MPs carry placards and tote bags displaying messages against atrocities on minorities in Bangladesh, and protest at the Parliament premises. pic.twitter.com/WLTAmBmyL0
இப்படிப் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய கவனத்தை ஈர்க்கும் விதமான செயலில் பிரியங்கா காந்தி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆனால், முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டால் மட்டும் பிரியங்கா அக்கறை காட்டுவதாக வலதுசாரிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.
வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் மீது தீ வைப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தது. இத்தகைய சம்பவத்துடன் தொடர்புப்படுத்திப் பொய் செய்திகளும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அவற்றின் உண்மைத்தன்மை குறித்து யூடர்னில் கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க: வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் மாட்டின் மீது தாக்குதல் நடத்தியதாகப் பரவும் பொய் செய்தி!
முடிவு:
முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் மட்டும் பிரியங்கா காந்தி அக்கறை காட்டுவதாகப் பரவும் தகவல் தவறானது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.