YouTurn

ராகுல் காந்தி அணிந்துள்ள ஷூ-வின் விலை 3 லட்சமா? உண்மை என்ன?

ராகுல் காந்தி அணிந்துள்ள ஷூ-வின் விலை 3 லட்சமா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அந்நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் அனைத்து பொருட்களின் விலையும் 3 லட்சம் எனத் தவறாக உள்ளது. பிறநாட்டு தளங்களுடன் ஒப்பிடுகையில் இதனை உறுதி செய்ய முடிகிறது.

பரவிய செய்தி

எளிமையின் அவதாரம்..!

image.png

X link

விரிவான விளக்கம்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி 3 லட்சம் மதிப்புள்ள ஷூ அணிந்திருப்பதாக பாஜக மற்றும் வலதுசாரிகள் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 

உண்மை என்ன?

ராகுல் காந்தி ஷூ குறித்து பரவக் கூடிய படத்தில் அதன் பெயர் ‘Cloud 5 Waterproof’ என்றுள்ளது. அந்த ஷூ-வின் விலை அந்நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் 3 லட்சம் என்றுதான் உள்ளது. 

rahul gandhi shoe

அதனை ஆடர் செய்ய முயற்சிக்கையில், ”Apologies, we're closed for now. We cannot guarantee deliveries to the area” எனத் தெரிவிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தற்போது இத்தளம் செயல்பாட்டில் இல்லை என்பதே இதன் பொருள். 

rahul gandhi shoe

ராகுல் காந்தி அணிந்துள்ள ஷூ மட்டுமின்றி அத்தளத்தில் உள்ள அனைத்து பொருட்களின் விலையுமே 3 லட்சம் என்றுள்ளது. அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் அமெரிக்க இணைதளத்தில் பொருட்களுக்கு ஏற்ப விலையில் மாற்றம் இருப்பதைக் காண முடிகிறது. 

rahul gandhi shoe

அதில் ராகுல் காந்தி அணிந்துள்ள ‘Cloud 5 Waterproof’ என்ற ஷூ-வின் விலை 170 அமெரிக்க டாலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அமேசான் தளத்தில் 189  யூரோ என்றுள்ளது. இதன் இந்திய மதிப்புகள் முறையே ரூ.14,465 மற்றும் ரூ.16,664 ஆகும். இதிலிருந்து தவறான விலை உள்ள தளத்தில் இருக்கும் தகவலைக் கொண்டு பொய் செய்தி பரப்பப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க: ராமர் கோவில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்படுமெனக் காங்கிரஸ் விளம்பரம் வெளியிட்டதாகப் பரவும் பொய்!

மேலும் படிக்க: இட ஒதுக்கீடு ரத்து செய்ய ஆலோசிக்கப்படும் என ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசியதாக பாஜக பரப்பும் பொய்!

முடிவு: 

ராகுல் காந்தி அணிந்துள்ள ஷூ-வின் விலை 3 லட்சம் எனப் பரவும் தகவல் தவறானது. அந்நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் அனைத்து பொருட்களின் விலையும் 3 லட்சம் எனத் தவறான உள்ளது. பிறநாட்டு தளங்களுடன் ஒப்பிடுகையில் இதனை உறுதி செய்ய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.