YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026414 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

28 நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட்ட நிலவின் பிறை நிலைகள் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்த புகைப்படம் 2017 ஜனவரி மாதம் தொடங்கி 2017 டிசம்பர் மாதம் வரையிலான ஓராண்டில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

உண்மை

முன்பின் தெரியாதவர் தொலைத்த ஆவணத்தைத் தபால் பெட்டியில் போட்டால் என்னவாகும்?

டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்கள் கீழே கிடைத்தால், அதனைத் தபால் பெட்டியில் போட்டு விடுங்கள். அதிலுள்ள முகவரிக்குக் கொண்டு சேர்க்கப்படும்.

பொய்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மோகினி டே-வை இணைத்துப் பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இரண்டு வெவ்வேறு வீடியோக்களை இணைத்து Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டது வீடியோ இது.

பொய்

மேடும் குழியுமாக இருக்கும் இந்த சாலை ஸ்ரீபெரும்புதூரில் இருப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த சாலை இந்தோனேசியா நாட்டின் ஜெபரா என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறது.

பொய்

பாஜகவுடன் கூட்டணி வைக்கிறதா தவெக? வைரல் புகைப்படம்... உண்மை என்ன?

விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை லண்டனில் சந்தித்ததாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது.

பொய்

'தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி' என பரப்பப்படும் தகவல் - உண்மை என்ன?

இது பொழுதுபோக்கு அம்சத்திற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்ட ‘Scripted’ வீடியோவாகும்.

பொய்

சலூன் கடையில் மசாஜ் செய்யும்போது ஒருவர் உயிரிழந்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட (Scripted) வீடியோ. இந்த வீடியோவின் இறுதியிலே 'பொறுப்புத் துறப்பு (Disclaimer)' குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

பொய்

மேலவளவு கொலையாளிகளை விடுதலை செய்ததா திமுக? உண்மை என்ன?

இது 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பழைய செய்தியாகும். அப்போது அதிமுக தான் ஆட்சியிலிருந்தது.

பொய்

தாஜ்மஹால் கட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ எனப் பரவும் பொய் செய்தி! உண்மை என்ன ?

தாஜ்மஹால் கட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ எனப் பரவும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ

பரபரப்பான சரிபார்ப்புகள்