யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது பொழுதுபோக்கு அம்சத்திற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்ட ‘Scripted’ வீடியோவாகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஒரு இளம் பெண்ணுடன் இளைஞரும், வயதான முதியவரும் மாலையுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, ‘தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி’ என்று திமுக ஆதரவாளர் ஒருவர் தனது ‘எக்ஸ்’ கணக்கில் பதிவிட்டிருந்தார்.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Kanhaiya Singh shorts’ என்னும் யூட்யூப் பக்கத்தில் இந்த வீடியோவை காண முடிந்தது. இந்த வீடியோ கடந்த நவம்பர் 10ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ‘Kanhaiya Singh shorts’ யூட்யூப் பக்கத்தில் இதுபோன்ற சில வீடியோக்கள் ‘அதே நபர்களை’ வைத்து எடுக்கப்பட்டதாக இருப்பதைக் காண முடிந்தது.
அவற்றில் சில வீடியோகளை பார்க்கையில், அவற்றில் ’இந்த வீடியோ முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்திற்காக எடுக்கப்பட்டது’ என்ற ‘Disclaimer’ குறிப்பு இருப்பதை காணமுடிந்தது. பரப்பப்படும் வீடியோவில் கூட 0.07 நொடியில் இந்த ‘Disclaimer’ குறிப்பு காட்டப்படுகிறது.

இதிலிருந்து, இந்த வீடியோ திட்டமிட்டு எடுக்கப்பட்ட ‘Scripted’ வீடியோ என்பது தெளிவாகிறது. இந்த ‘Scripted’ வீடியோவை உண்மையானது என நினைத்து தவறாக பரப்புகிறார்கள்.
முடிவு:
இந்த வீடியோ திட்டமிட்டு எடுக்கப்பட்ட ‘Scripted’ வீடியோவாகும். இதனை உண்மையென நினைத்து தவறாக பரப்புகிறார்கள்.
