YouTurn

முன்பின் தெரியாதவர் தொலைத்த ஆவணத்தைத் தபால் பெட்டியில் போட்டால் என்னவாகும்?

முன்பின் தெரியாதவர் தொலைத்த ஆவணத்தைத் தபால் பெட்டியில் போட்டால் என்னவாகும்?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்கள் கீழே கிடைத்தால், அதனைத் தபால் பெட்டியில் போட்டு விடுங்கள். அதிலுள்ள முகவரிக்குக் கொண்டு சேர்க்கப்படும்.

பரவிய செய்தி

டிரைவிங் லைசென்ஸ் (DL), ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், வாக்காளர் அட்டை போன்ற முக்கியமான ஆவணங்களை யாராவது தவறவிட்டதாக நீங்கள் கண்டால், அவற்றை தபால் பெட்டிகளில் போட்டு விடவும். அவை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் மற்றும் அவர்களிடமிருந்து அஞ்சல் கட்டணம் அல்லது அபராதம் வசூலிக்கப்படும்".


driving licence missing

விரிவான விளக்கம்

முன்பின் தெரியாதவர் தொலைத்த ஓட்டுநர் உரிமம் (driving licence), குடும்ப அட்டை (ration card), கடவுச் சீட்டு (passport), வங்கிக் கணக்கு புத்தகம் (bank passbook), வாக்காளர் அடையாள அட்டை (voter id) போன்ற ஆவணங்கள் உங்களிடம் கிடைக்கும் பட்சத்தில், அதனைத் தபால் பெட்டியில் போட்டுவிட்டால், அதில் உள்ள முகவரிக்குச் சென்று சேர்ந்துவிடுமென ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் பகிரப்படுகிறது. மேலும் அதில், இதற்கான அஞ்சல் கட்டணம் அல்லது அபராதம் ஆவண உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

driving licence missing post box

இந்த தகவலை யூடர்னின் வாட்சப் எண்ணிற்கு (+91 63697 48351) அனுப்பி இதன் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க வாசகர் ஒருவர் கேட்டுள்ளார்.


உண்மை என்ன?


பரவக் கூடிய வாட்ஸ் அப் செய்தி குறித்து இணையத்தில் தேடியதில், இத்தகவல் பல ஆண்டுகளாக இணையத்திலும் சமூக வலைத்தளத்தில் இருப்பதைக் காண முடிந்தது. மேலும் ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறையும் இதே தகவலை 2013-ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


எனவே இது பற்றி முழுமையாக அறிய, சென்னை பூக்கடை பகுதியில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலகத்தை (Chennai City North Division) தொடர்பு கொண்டு பேசினோம். 


இந்த தகவல் உண்மைதான். முன்பின் தெரியாதவர் ஆவணத்தைத் தொலைத்த நிலையில், அது உங்களிடம் கிடைத்தால் அருகில் உள்ள தபால் பெட்டியில் போட்டுவிடுங்கள். உரியவரிடம் ஆவணத்தில் உள்ள முகவரி அடிப்படையில் கொண்டு சேர்க்கப்படும். ஆனால், இதற்கு எவ்வித அபராதமோ கட்டணமோ வசூலிக்கப்படாது என அஞ்சல் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இவற்றிலிருந்து மேற்கண்ட வாட்ஸ் அப் தகவல் உண்மைதான் என்பதை உறுதி செய்ய முடிகிறது. 


முடிவு: 


முன்பின் தெரியாதவர் தொலைத்த ஆவணம் உங்களிடம் கிடைத்தால், அருகில் உள்ள தபால் பெட்டியில் போட்டுவிடுங்கள். அது ஆவணத்தில் உள்ள முகவரிக்குச் சென்று சேர்ந்துவிடும் எனப் பகிரப்படும் தகவல் உண்மைதான். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.