YouTurn

மேடும் குழியுமாக இருக்கும் இந்த சாலை ஸ்ரீபெரும்புதூரில் இருப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

மேடும் குழியுமாக இருக்கும் இந்த சாலை ஸ்ரீபெரும்புதூரில் இருப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த சாலை இந்தோனேசியா நாட்டின் ஜெபரா என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறது.

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

சாலையின் மேற்பரப்பு பெயர்ந்து  மேடும் குழியுமாக இருக்கிறது. இந்தக் குழிகளைச் சுற்றி வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி மோசமான நிலையில் இருக்கும் சாலையின் வீடியோவை பதிவிட்டு, இந்த சாலை ஸ்ரீபெரும்புதூரில் இருப்பதாகப் பரப்பப்படுகிறது.


https://x.com/i/web/status/1858873583491018985


உண்மை என்ன:


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடியதில், Jepara Update என்னும் யூட்யூப் தளத்தில், 'ஜெபராவில் உள்ள குடியிருப்பு வாசிகள்  சேதமடைந்த சாலைகளைப் படைப்பாற்றலுடன் விமர்சிக்கின்றனர்' என்ற தலைப்பில் ஒரு வீடியோ காணக்கிடைத்தது. 


image.png


இதனைத்தொடர்ந்து, 'Jepara damaged roads' என்ற keywords கொண்டு மேலும் தேடுகையில், Merdeka.com என்ற இணையத்தளத்தில் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள செய்தியின் படி, இந்த சாலை இந்தோனேசியா நாட்டின்  ஜெபரா என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருப்பதாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ @udiintpanjol என்ற TikTok கணக்கிலிருந்து பதிவிடப்பட்டிருக்கிறது. 


image.png


ஆகஸ்ட் 17 அன்று இந்தோனேசியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு குடியிருப்பு வாசிகள் தங்களது பகுதிகளை பல்வேறு வகைகளில் அலங்காரம் செய்வது இந்த கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும். 


சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக அலங்காரம் செய்யும் பொருட்டு, இந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் மிக மோசமான நிலையில் இருக்கும் இந்தச் சாலையில் வெள்ளை நிறப் பெயிண்டை கொண்டு அலங்காரம் செய்துள்ளனர். முறையான சாலை வசதி இல்லாத தங்களது குறையை இப்படி நூதனமான முறையில் வெளிப்படுத்தியுள்ளனர். 


இதிலிருந்து, இந்த சாலை ஸ்ரீபெரும்புதூரில் இருப்பதாக பரப்பப்படும் தகவல் தவறானது என்பது தெளிவாகிறது. இந்த சாலை இந்தோனேசியா நாட்டின் ஜெபரா என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறது. மேலும், தங்களது பகுதியில் முறையான சாலை வசதி இல்லாத குறையை அரசிற்குத் தெரியப்படுத்த அப்பகுதி மக்கள் இவ்வாறு செய்துள்ளனர். மேலும், இந்த சாலையில் வெள்ளை நிறத்தில் செய்யப்பட்டிருக்கும் அலங்காரம் 'சாலையின் அவல நிலையை மறைக்க' அரசால் செய்யப்பட்டதல்ல என்பதும் தெளிவாகிறது. 


முடிவு:


இந்த சாலை ஸ்ரீபெரும்புதூரில் இருப்பதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். இந்த சாலை இந்தோனேசியா நாட்டின் ஜெபரா என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறது. சாலை வசதி இல்லாத குறையை அரசிற்குத் தெரியப்படுத்த அந்த கிராமத்தின் மக்களால் செய்யப்பட்ட நூதன முயற்சியாகும் இது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.