YouTurn

தாஜ்மஹால் கட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ எனப் பரவும் பொய் செய்தி! உண்மை என்ன ?

தாஜ்மஹால் கட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ எனப் பரவும் பொய் செய்தி! உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தாஜ்மஹால் கட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ எனப் பரவும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ

பரவிய செய்தி

கானக்கிடைக்காது கானொலி.......

தாஜ்மஹால் கட்டியபோது....

image.pngx


X Link

விரிவான விளக்கம்

காணக்கிடைக்காத காணொளி.. தாஜ்மஹால் கட்டியபோது… என்ற தலைப்புடன் 0:54 வினாடிகள் கொண்ட  வீடியோ ஒன்று சமூக வலைத்தளப்பக்கங்களில்  வைரலாகி வருகின்றது. அதில் தாஜ்மஹாலின் கட்டுமானப் பணிகள் நடைபெறுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.


https://x.com/i/web/status/1854029408115257592


உண்மை என்ன?


பரவி வரும் வீடியோ குறித்து நாம் ஆய்வுசெய்து பார்த்ததில் இவை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்பதை அறியமுடிந்தது.


தாஜ்மஹால் 1631 - 1648ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆக்ராவில் முகலாய பேரரசர் ஷாஜகானால் கட்டப்பட்டது. அக்காலக்கட்டத்தில் கேமரா கண்டுபிடிக்கப்பட்டதா என்றால் இல்லை. இந்நிலையில் தாஜ்மஹாலில் கட்டுமானப் பணிகளை வீடியோவாக எடுத்திருக்க முடியாது.  


இதனடிப்படையில், பரவி வரும் வீடியோவின் உண்மைத்தன்மையை கண்டறிய கூகுள் தேடல் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், ‘AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தாஜ்மஹாலின் கட்டுமான பணிகள்” என்ற தலைப்பில் அக்டோபர் 30ஆம்  தேதி Ai_Dance99  என்ற யூடியூப் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோவை பதிவு செய்திருப்பதை பார்க்க முடிந்தது. 


மேலும் அதன் விளக்கப்பகுதியிலும் (Description) இது செயற்கையாக உருவாக்கப்பட்ட காணொளி எனக் குறிப்பிட்டிருந்தது.


தொடர்ந்து, பரவி வரும் வீடியோவினை, Truemedia மற்றும் Hive Moderation உள்ளிட்ட இணையதளங்களில் பதிவேற்றி ஆய்வு செய்ததில், இவ்விரு இணையதளங்களிலுமே இவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (AI  Technology) உருவாக்கப்பட்டவை என்பதை தெரிந்துக்கொள்ள முடிந்தது.  



இவற்றின் மூலம், தாஜ்மஹாலின் கட்டுமான பணிகள் நடைபெறுவதாக பரப்பப்படும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது .


முடிவு :


நம் தேடலில்,  தாஜ்மஹாலின் கட்டுமான பணிகள் நடைபெற்றதாக பரவும் வீடியோ தகவல் தவறானது. இவை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதே உண்மை. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க