யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட Scripted வீடியோவாகும்.
பரவிய செய்தி
காய்கறிகளை கழுவி சாப்பிட்டாலும் உள்ளே இருக்கும் விஷம் போகாது என்ற நிலை உள்ளது. இதைவிட வேதனையான நிலை என்னவெனில், இதை தடுக்க கடுமையான சட்டம் எதுவும் இல்லை என்பது தான்.

விரிவான விளக்கம்
விளைநிலத்தில் விளைந்து வரும் காய்கறிகளுக்கு சிலர் ஊசி மூலம் மருந்து ஏற்றும் வீடியோவை பதிவிட்டு, ’இப்படி மருந்து போட்டு வளர்க்கப்படும் காய்கறிகளில் இருக்கும் விஷம் கழுவினாலும் போகாது. இது போன்ற செயல்களை தடுக்க கடுமையான சட்டம் எதுவும் இல்லை’ என்று எழுதி ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு Reverse Image Searching முறையில் தேடுகையில், ‘love you’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவில், ”நண்பர்களே, இந்த காணொளி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மட்டுமே செய்யப்பட்டது” என்று Disclaimer குறிப்பு எழுதப்பட்டிருந்தது.

மேலும் தேடுகையில், ‘Social Message’ என்ற யூட்யூப் தளத்தில், ’விவசாயிகள் பூசணிக்காய்க்கு ஊசி போட்டனர். போலீசார் கைது செய்தனர்’ என்ற தலைப்பில் பரப்பப்படும் வீடியோவையொத்த மற்றொரு வீடியோவைக் காண முடிந்தது. இந்த வீடியோவின் 19ஆவது நொடியில், “இந்த காணொளி முழுக்க புனைவு. இந்தக் காணொளியில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்டது” என்று Disclaimer குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த இரண்டாவது வீடியோவில் இருக்கும் நபர் பரப்பப்படும் முதல் வீடியோவில் இருக்கும் நபர் தான் என்பதை காண்கிறோம்.
‘Social Message’ என்ற பேஸ்புக் பக்கத்தில், இதனையொத்த மற்றொரு வீடியோவைக் காண்முடிந்தது. இந்த வீடியோவில் ஒரே வித்தியாசம் என்னவென்றால், இங்கே காய்கறிக்களுக்கு ஊசி ஏற்றுபவர்கள் முகத்தை துணியைக் கொண்டு மூடியிருக்கிறார்கள். இந்த ‘Social Message’ பேஸ்புக் பக்கத்தின் Intro-வில் ‘இந்தப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் சில வீடியோக்கள் Scripted’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து, பரப்பப்படும் வீடியோ முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட Scripted வீடியோ என்பது தெளிவாகிறது. இதனை உண்மைச் சம்பவம் என நினைத்து தவறாக பரப்புகிறார்கள்.
முடிவு:
இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட Scripted வீடியோவாகும். இதை உண்மைச் சம்பவம் என நினைத்து தவறாக பரப்புகிறார்கள்.