யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட (Scripted) வீடியோ. இந்த வீடியோவின் இறுதியிலே 'பொறுப்புத் துறப்பு (Disclaimer)' குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
பரவிய செய்தி
கவனமாக இருங்கள். கழுத்து மற்றும் முதுகு எலும்பில் மசாஜ் செய்யும் போது கவனம் தேவை.

விரிவான விளக்கம்
சலூன் கடையொன்றில் ஒருவர் கழுத்து மசாஜ் செய்துகொள்ளும் போது, கழுத்து திருப்பப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழப்பது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இதுபோன்று நடக்காமல் இருக்க கவனமாக இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் இறுதியில், 'பொறுப்புத் துறப்பு (Disclaimer)' குறிப்பு இருப்பதை காணமுடிகிறது. அதில் 'வாழ்க்கை சூழல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற வீடியோ காட்சிகளை வெளியிடுவதாக' குறிப்பிட்டப்பட்டள்ளது.

மேலும், பரப்பப்படும் வீடியோவின் Keyframe -களைக் கொண்டு Reverse Image Search முறையில் தேடுகையில், '3RD EYE' என்னும் யூட்யூப் தளத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இந்த யூட்யூப் தளத்தில் இதுபோன்று பல 'முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட (Scripted) வீடியோக்கள்' வெளியிடப்பட்டிருப்பதை காண்கிறோம். இவற்றில் பெரும்பாலான வீடியோக்களில், இந்த 'பொறுப்புத் துறப்பு (Disclaimer)' குறிப்பு இறுதியில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

இதிலிருந்து, இந்த '3RD EYE' என்னும் யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோ 'முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட (Scripted) வீடியோ' என்பது உறுதியாகிறது. இதனை, மெய்யான சம்பவம் என்று நினைத்து தவறாக பரப்புகின்றனர்.
முடிவு:
இது முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட (Scripted) வீடியோவாகும். இதனை உண்மையான சம்பவம் என நினைத்து தவறாக பரப்புகின்றனர்.