YouTurn

’தாயை நெகிழ வைத்த இராணுவ வீரர்’ என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

’தாயை நெகிழ வைத்த இராணுவ வீரர்’ என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது முன்பே திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோவாகும்.

பரவிய செய்தி

ராணுவத்தில் பணியாற்றும் மகன்..... ரோட்டோரத்தில் இளநீர் விற்கும் தாயை சொல்லாமல் பார்க்க வந்து வந்து சல்யூட் அடித்து நிற்க்கும் காட்சி…


image.png


X Link

விரிவான விளக்கம்

இளநீர்க் கடையில் வேலை செய்துகொண்டிருக்கும் அம்மாவை ஒருவரை இராணுவ உடுப்பு அணிந்து வந்த ஒருவர் ஆச்சரியப்படுத்துகிறார்; பின்னர் அவர்தான் தனது மகன் என்று தெரிந்த அந்த அம்மா நெகிழ்ந்து போகிறார். இந்த வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.


https://x.com/i/web/status/1858537374906528005

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடியதில், ‘3RD EYE’ என்ற யூட்யூப் சேனலில் இந்த வீடியோ காணக்கிடைத்தது. இந்த வீடியோவின் இறுதியில், ’இந்த வீடியோவில் வரும் கதாப்பாத்திரங்கள் பொழுதுபோக்கிற்காகவும் விழிப்புணர்விற்காகவும் தான்’ என்று ‘Disclaimer’ குறிப்பு வருகிறது. 


image.png


இந்த  ‘3RD EYE’ என்ற யூட்யூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் மேலும் சில வீடியோக்களை பார்க்கையில், இதே ‘Disclaimer’ குறிப்பு போடப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட இந்த வீடியோவின் இறுதியிலும் இந்த ‘Disclaimer’ குறிப்பைக் காண முடிகிறது.



இதிலிருந்து, இந்த வீடியோ முன்பே திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோ என்பது தெளிவாகிறது. சிலர் இந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சியை உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்.


முடிவு:

 

இது முன்பே திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோவாகும். இதனை சிலர் உண்மை என்று நம்பி சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.