YouTurn

28 நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட்ட நிலவின் பிறை நிலைகள் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

28 நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட்ட நிலவின் பிறை நிலைகள் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த புகைப்படம் 2017 ஜனவரி மாதம் தொடங்கி 2017 டிசம்பர் மாதம் வரையிலான ஓராண்டில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

பரவிய செய்தி

ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 28 நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட்ட வளர்பிறை நிலவின் அழகிய காட்சி

 

X Link | Archive Link

விரிவான விளக்கம்

வானில் நிலவு வளர்ந்து தேயும் பிறைகளை காட்சிபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, இது 'ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 28 நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டது' என்று சமூக வலைதளங்களில்  பரப்பப்படுகிறது.

 

உண்மை என்ன:

 

இந்த புகைபடத்தின்  keyframe-களைக் கொண்டு தேடுகையில், Giorgia Hofer என்னும் வானியல் புகைப்படக் கலைஞரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை காண முடிந்தது. 2018ஆம் ஆண்டு ஜீன் 22ஆம் தேதி அன்று இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டிருக்கிறார். அதில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதைப் பற்றிய குறிப்புகளையும் பதிவிட்டுள்ளார்.

 

https://www.instagram.com/p/BkUKc3VgYYM/


அதன்படி, இந்தப் புகைப்படம் 28 புகைப்படங்களின் கலவையாகும் (Composition). இது இத்தாலியின் Cridola Group என்னும் மலைப்பகுதியில் 'சினோடிக் மாதம்' என்று அழைக்கப்படுகிற ஒரு சந்திர மாதத்தில் நிலவின் மாறக்கூடிய இடத்தையும் (Positions) நிலைகளையும் (phases) காட்சிபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.

 

இந்த புகைப்படத்தை எடுக்க, வானவியல் செயலி ஒன்றை பயன்படுத்தி 27 நாட்களுக்கு நிலவின் இருப்பிடத்தை கணக்கிட்டு புகைப்படம் எடுத்துள்ளார். இந்த 27 நாட்களில் ஒவ்வொரு 1481 நிமிடங்களுக்கும் (24 மணிநேரம் 41 நிமிடங்கள்) நிலவின் மாறக்கூடிய இடங்களை கணக்கிட்டு அதன்படி புகைப்படங்களை எடுத்துள்ளார். 

 

ஆனால், வானிலை சரியாக அமையாத  காரணத்தால் இந்த புகைப்படங்களை எடுத்து முடிக்க அவருக்கு ஓராண்டு தேவைப்பட்டிருக்கிறது.

 

'இந்தப் புகைப்படத்தின் இடதுபுறத்தில் இருப்பவை நிலவின் தேய்பிறை ஆகும். அது 2017 ஜனவரி மாதம் எடுக்கப்பட்டிருக்கிறது.  அதேபோல் புகைப்படத்தின் வலதுபுறத்தில் இருப்பவை நிலவின் வளர்பிறை காலமாகும். அவை 2017 ஜீலை தொடங்கி டிசம்பர் 2017 வரை எடுக்கப்பட்டதாகும்'  என்று Giorgia Hofer தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதியுள்ளார்.

 

இதிலிருந்து, இந்த புகைப்படம் ஓராண்டாக எடுக்கப்பட்ட 28 புகைப்படங்களின் கலவை என்பது தெளிவாகிறது.  இதன்படி பார்த்தால் அது உண்மையில் 28 நாட்களில் ஏற்பட்ட நிலவின் நிலைகளையும் இடத்தையும் காட்சிபடுத்தவில்லை. ஆனால், அப்படி 28 நாட்கள் நிலவு வளர்ந்து தேயும் பிறை நிலைகளை மறு உருவாக்கம் செய்யும் வகையில் ஓராண்டாக எடுக்கப்பட்டதாகும். இதனால், இந்த புகைப்படம் 28 நாட்களில் எடுக்கப்பட்டது என்று கூறுவது திரிக்கப்பட்ட தகவலாகும்.

 

முடிவு:

 

இந்த புகைப்படம் 28 புகைப்படங்களின் கலவையாகும் (Composition). அது 2017 ஜனவரி மாதம் தொடங்கி 2017 டிசம்பர் மாதம் வரையிலான ஓராண்டில் எடுக்கப்பட்டதாகும். அது 28 நாட்களில் எடுக்கப்பட்டதாக திரித்துப் பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.