YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

சென்னையின் தண்ணீர் பஞ்சத்திற்காக பதிவிட்ட லியனார்டோ டிகாப்ரியோ !

ஹாலிவுட் நடிகரான லியனார்டோ டிகாப்ரியோ சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து தனது குரலினை பதிவு செய்து வருகிறார். திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதினைப் பெற்ற தருணத்தில் கூட மேடையிலேயே உலகின் பருவநிலை மாற்றம் குறித்து பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சுற்றுசூழல்...

" 10 ரூபாய் நாணயம் " தீண்டத்தகாத பொருளா ? வாங்க மறுப்பதேன் !

2011-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. 10 ரூபாய் மதிப்பிற்கும் , நாணயத்திற்கு ராசியே இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு கட்டத்தில் " 10 ரூபாய் நாணயங்கள் " செல்லாது என்ற புரளி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. 2016-ம் ஆண்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என...

மக்களவையில் தமிழக எம்பிக்களில் ஒருவர் கூட தமிழில் கையெழுத்திடவில்லையா ?

தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் பதவியேற்பின் பொழுது எழுப்பிய " தமிழ் வாழ்க " என்ற முழக்கம் அங்குள்ளவர்களை கூச்சலிடச் செய்தது. இதையடுத்து, இந்திய அளவில் தமிழ் வாழ்க என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யப்பட்டது. ஆனால், தமிழ் வாழ்க என முழங்கியவர்கள் யாரும்...

ராணுவ மோப்ப நாய்களுக்கு யோகா பயிற்சி அவசியமா ?

தேசிய யோகா தினத்தன்று நாடு முழுவதிலும் அரசியல் தலைவர்கள் முதல் மக்கள் வரையில் பலரும் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்கள் அதிகம் பதிவிடப்பட்டன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையாகியது. New India...

தண்ணீர் விநியோகிப்பதை தடுத்த முன்னாள் கவுன்சிலர்! மாற்றி மாற்றி செய்தி வெளியிட்ட தனியார் சேனல்!

சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை என்பது தெரிந்ததுதான் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது இதை சமாளிக்க பலரும் அதிகம் உதவி செய்கின்றனர். ரஜினி ரசிகர் மன்றம், திமுக எம்எல்ஏ மா சுப்ரமணியம் மற்றும் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் இலவசமாக வழங்குவதை செய்திகளில் பார்க்க முடிந்தது. இதில்...

ஹெச்.ராஜா பதிவிட்ட, பகிர்ந்த புரளிகளின் தொகுப்பு !

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்டார். ஹெச்.ராஜா என்றால் யார் என தமிழகத்தில் பெரும்பாலோனோருக்கு நன்றாக தெரியும். பெரியார் முதல் உயர் நீதிமன்றம் வரையில் சர்ச்சையான பல கருத்துக்களை பேசி...

கல்லூரி முதல் நாளில் பேருந்தில் மாணவர்களின் அட்டூழியங்கள் !

ஜூன் 17-ம் தேதி(திங்கள்) அன்று கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், சென்னையில் அயனாவரம் மற்றும் ராயப்பேட்டை பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் பேருந்தின் மேல் பகுதியில் அமர்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பிக் கொண்டு...

சென்னையில் திமுக எம்எல்ஏ மகனின் ஆக்கிரமிப்பு கடை அகற்றம் !

அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் எதிரொலியாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி அவர்களின் மகன் ஆக்கிரமித்த நடைபாதை பத்திரமாக மீட்கப்பட்டது என்ற மீம் பதிவை அறப்போர் இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் பார்க்க முடிந்தது. நடைபாதை ஒன்றில் அமைக்கப்பட்ட விர்ஜின் கேஃப் என்ற கடை அகற்றப்பட்டு இருப்பதாகவும்...

வைரலாகும் தினமலர் பத்திரிக்கையின் தலைப்பு செய்தி | எடிட்டிங் செய்ததா ?

தினமலர் செய்தித்தாளின் தலைப்பு இரு நாட்களாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தினமலர் நாளிதழின் தலைப்பு செய்தியில், " சென்னையில் தண்ணீர் பஞ்சம், தினமலர் விற்பனை உயர்வு " என வெளியாகியதாக ஃ பேஸ்புக்கில் பதிவிடப்பட்டது. " சென்னையில் தண்ணீர் பஞ்சம், தினமலர் விற்பனை...

40,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால ஓநாயின் தலை !

புவி வெப்பமயமாதலால் பனிப் பிரதேசங்கள் உருகிக் கொண்டிருப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதிகரிக்கும் வெப்பத்தினால் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் பனிப் பாறைகள் பெருமளவில் உருவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவின் சைபீரியப் பகுதியான யக்கூடியாவில் உருகிய பனிப் பகுதியில்...

தென்னக ரயில்வேயின் மொழிக் குறித்த சுற்றறிக்கை வாபஸ் !

மதுரையில் சில வாரங்களுக்கு முன்பாக ஒரே பாதையில் இரு ரயில்கள் இயக்கப்பட்டன. அதற்கு இரு ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு இடையே இருந்த மொழிப் பிரச்சனை காரணம் எனத் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் சமூக வலைதளங்களில் கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில், ஜூன் 12-ம் தேதி தென்னக ரயில்வே வெளியிட்ட சுற்றறிக்கையில், "...

அபிநந்தன் உருவில் இந்தியாவை கேலி செய்த பாகிஸ்தான் தொலைக்காட்சி விளம்பரம் !

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 16-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை கேலி செய்யும் நோக்கத்தில் வெளியான பாகிஸ்தான் நாட்டின் தொலைக்காட்சி...