YouTurn

ராணுவ மோப்ப நாய்களுக்கு யோகா பயிற்சி அவசியமா ?

தேசிய யோகா தினத்தன்று நாடு முழுவதிலும் அரசியல் தலைவர்கள் முதல் மக்கள் வரையில் பலரும் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்கள் அதிகம் பதிவிடப்பட்டன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையாகியது. New India...

ராணுவ மோப்ப நாய்களுக்கு யோகா பயிற்சி அவசியமா ?
தேசிய யோகா தினத்தன்று நாடு முழுவதிலும் அரசியல் தலைவர்கள் முதல் மக்கள் வரையில் பலரும் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்கள் அதிகம் பதிவிடப்பட்டன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையாகியது.


ஜுன் 21-ம் தேதி ராகுல் காந்தி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், " இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்கள் மற்றும் அதன் பயிற்சியாளர்கள் குழு இணைந்து நடத்திய யோகா பயிற்சியின் புகைப்படங்களை " பதிவிட்டு " நியூ இந்தியா " என தலைப்பிட்டு இருந்தார்.




பிஜேபியின் முக்கிய தலைவர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, எம்பிக்கள், ஆதரவாளர்கள் என பலரும் ட்விட்டரில் ராகுல் காந்திக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர்.

உண்மையில், ராணுவத்தின் மோப்ப நாய்கள் குழு சமீபத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதா அல்லது போட்டோஷாப் புகைப்படங்களா என ஆராய்கையில், ராகுல் காந்தி பதிவிட்ட புகைப்படங்களை முதலில் பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஜூன் 20-ம் தேதி பதிவிட்டு " ராணுவ மோப்ப நாய்கள் குழு யோகா பயிற்சி மேற்கொள்வதாக " கூறியுள்ளனர்.



ராகுல் காந்தி பதிவிட்டது உண்மையான படமே. வீரர்களையும், நாயையும் ஒப்பிட்டு கிண்டல் செய்து போலியான படத்தை பதிவிடவில்லை. பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியாகியதை பகிர்ந்து உள்ளார்.

தற்போதைய மத்திய அரசு யோகா பயிற்சியை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பழமையான யோகா கலையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்து சரியானவையே. ஆனால் ராணுவத்தில் இருக்கும் மோப்ப நாய்களை யோகா பயிற்சி செய்ய வைப்பதற்கு அவசியம் என்ன ? மோப்ப நாய்களுடன், பயிற்சி வீரர்களை யோகா பயிற்சி செய்ய வைத்தது ஏன் ?

மோப்ப நாய்களை யோகா பயிற்சி செய்ய வைத்த பிற்போக்குத்தனத்தையே ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருக்கக்கூடும். யோகா கலையை மோப்ப நாய்களை செய்ய வைத்தது, நாய்களையும் வீரர்களையும் ஒன்றாக யோகா பயிற்சி செய்ய வைத்த பிற்போக்கு செயலை " நியூ இந்தியா " என குறிப்பிட்டு உள்ளார். ராகுல் காந்தி எழுப்பி இருப்பது கேள்வியே ? போலியானச் சித்தரிப்பு படங்கள் இல்லை.

proof :

Rahul Gandhi's tweet on yoga day draws criticism 

Rahul Gandhi's Yoga Day tweet goes viral; Twitterati respond with 'Same-Shame Rahul'
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை