’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?
’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.
விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடையப் போகிறது. இந்த குறுகிய காலத்தில் இந்த அரசின் மீது எழுந்த பல விமர்சனங்களில் முக்கியமான ஒன்று, முந்தைய அரசு கொண்டு வந்து ஏற்கனவே அமலில் இருக்கும் திட்டங்களை புதிதாக தொடங்கப்பட்டது போல் தவறாக பரப்புவது தான்.
தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் ’முதல்முதலான தனியார் பள்ளி வாகனங்களை சோதனை செய்யும் அதிகாரிகள்’, ’தவெக அமைச்சர் கீர்த்தனா தான் முதல் பெண் அமைச்சர்’, ’அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்’ என்று பல பொய்யான தகவல்கள் தவெக ஆதரவாளர்களால் இதுவரை பரப்பப்பட்டு வந்திருக்கிறது. இதனையெல்லாம் நமது ‘YouTurn’ தளத்தில் அம்பலப்படுத்தி எழுதியுள்ளோம்.
மிக சிறப்பு...💥💥
அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல!
அரசுப்பள்ளி பெருமையின் அடையாளம்!
Our CM is Playing a Big Game against Corporate and Privatising Politics.
Super அண்ணா @TVKVijayHQ 🫡🫡🫡#TVKVijayHQ #CMJosephVijay pic.twitter.com/bF4fTNwpyX
அந்த வரிசையில் தற்போது, தவெக அரசு பொறுப்பேற்றவுடன் அரசு பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ‘அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல! அரசுப்பள்ளி பெருமையின் அடையாளம்!’ என்ற முழக்கத்தை தவெக அரசு மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் விதமாக திட்டமிட்டிருப்பதாக பரப்பப்படுகிறது.

ஆனால் இந்த முழக்கம் தவெக அரசு புதிதாக தற்போது முன்வைத்த ஒன்றா? இல்லை! இந்த முழக்கம் கடந்த திமுக ஆட்சிக்காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்ட ஒன்று தான்.
திருச்சி கலைஞர் நகரில் சிறப்பான முறையில் செயல்பட்டுவந்த அரசு உயர்நிலைப்பள்ளி, அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நடப்புக் கல்வியாண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதையொட்டி, இன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்று, வாழ்த்துரையாற்றி… pic.twitter.com/TADkqHgEcN
2021ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘இனி வரும் காலங்களில் பள்ளிக் கல்வித்துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்குவோம். அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்’ என்று பேசினார்.
பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித் துறை சார்ப்பாக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சிகளிலும் பள்ளி வாளகங்களில் உள்ள சுவர்களிலும் இந்த வாசகம் இடம்பெறச் செய்யப்பட்டது. புதிய அரசு பள்ளிகள் திறக்கப்படும் போதும், அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போதும், பள்ளிக்கல்வித் துறை சார்ந்து ஏதேனும் சாதனைகள் செய்யப்படும் போது அப்போதையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த வாசகத்தை தொடர்ந்து முன்நிறுத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சென்ற திமுக ஆட்சியில் அரசு பள்ளிகள் குறித்து தொடர்ந்து முன்நிறுத்தப்பட்ட இந்த வாசகத்தை தற்போது தவெக அரசு தான் புதிதாக கொண்டு வந்தது போல் தவறாக பரப்புகிறார்கள்.