பொய்யான கல்வித் தகுதியை வெளியிட்டு வரும் தவெக MLAகள்!
தவெக MLA-கள் தங்களது வேட்புமனுவில் கொடுக்கப்பட்டிருக்கும் உண்மையான கல்வித் தகுதிக்கு மாறாக பொய்யான கல்வித் தகுதியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம். சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தது தவெக. இந்நிலையில், தவெக கட்சியின் சமூக வலைத்தளங்களிலும் இணையதளத்திலும் வெற்றிபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதிகள் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. அதனை ஆதாரப்பூர்வமாக கீழா அம்பலப்படுத்தியுள்ளோம்.

போளூர் தொகுதியில் தவெக வேட்பாளராக நின்று வெற்றி R.அபிஷேக், MBA படித்துள்ளதாக தவெக பக்கத்தில் பரப்பப்படுகிறது.

ஆனால் அவர் சமர்பித்த வேட்புமனுவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி, ஆனால் அவர் சென்னையில் உள்ள VIT கல்வி நிறுவனத்தில் M.S. Software Engineering மட்டுமே படித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் MS, MBA படித்துள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது.

சென்னை எக்மோர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் ராஜ்மோகன் தற்போது பள்ளிகல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். இவர் B.Tech. IT படித்திருப்பதாக தவெக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் அவரது வேட்புமனுவில் உள்ள விவரங்களின் படி, அவர் டிப்ளமோவும் BA பட்டப்படிப்பும் தான் படித்திருப்பதாக தெரியவருகிறது. ஒரு கல்வி அமைச்சர் கல்வித் தகுதியை கூட தவறாக பரப்பிவருகிறார்கள் தவெகவினர்.

தஞ்சாவூர் தொகுதி தவெக வேட்பாளர் விஜய் சரவணன் BBA பட்டப்படிப்பு படித்துள்ளதாக தவெக அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் கரந்தையில் உள்ள உமா மகேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் SSLC வரை மட்டுமே படித்துள்ளதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற தவெக வேட்பாளர் S.P.செல்வம் என்பவரை, ‘Dr.S.P.செல்வம்’ என்று குறிப்பிட்டு பரப்பி வருகிறார்கள்.

ஆனால், அவர் தனது வேட்புமனுவில் தான் டிப்ளமோ (DCE) வரை மட்டுமே படித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆய்வுப் படிப்பில் முனைவர் பட்டமோ, கௌரவ முனைவர் பட்டமோ பெறாமல் அவர் தனது பெயருக்கு முன்னால் ’Dr’ என்று சேர்த்துக்கொள்வது அடிப்படையிலே தவறானதாகும்.

தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற தவெக வேட்பாளர் D.சரத்குமார், MBA படித்துள்ளதாக பரப்பப்படுகிறது.

ஆனால் அவர் தனது வேட்புமனு, மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் BBA வரை மட்டுமே படித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

குமாரபாளையம் தொகுதியில் வெற்றிபெற்ற தவெக வேட்பாளர் C.வியைலட்சுமி B.Com வரை படித்துள்ளதாக பரப்பப்படுகிறது.

ஆனால் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
37-year-old Graduate Kanimozhi Santhosh of TVK has emerged victorious in the Kavundampalayam constituency, Coimbatore — marking a notable win for a young candidate.
Kanimozhi, a native of Narasimhanaickenpalayam, is a lawyer, entrepreneur, and self-proclaimed “celebrity… pic.twitter.com/Krg5sVQAj2
கவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றிபெற்ற தவெக வேட்பாளர் பெயர் ‘Dr. கனிமொழி சந்தோஷ்’ என்ற சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் அவரது வேட்புமனுவில் அவரே குறிப்பிட்டுள்ள படி, அவர் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் B.A.BL., (Hons) படித்திருக்கிறார். அவர் முனைவர் பட்டமும் பெறவில்லை, அவர் மருத்துவருமில்லை என்பதால் பெயருக்கு முன்னால் ‘Dr’ என்று எழுதுவது தவறானதாகும்.
ஆவடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற தவெக வேட்பாளரை ‘Dr.R.ரமேஷ்குமார்’ என்று தவெக கட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆனால் அவரது வேட்புமனுவில் உள்ள தகவலின் படி அவர் BA இளங்கலை பட்ட படிப்பு மட்டுமே முடித்துள்ளார் என்பது தெரிகிறது. இளங்கலை பட்ட படிப்பு மட்டுமே எப்படி ‘Dr’ என்று போட்டுக்கொள்ள முடியும்!
இவ்வாறு, தவெக MLA-கள் தங்களது வேட்புமனுவில் கொடுக்கப்பட்டிருக்கும் உண்மையான கல்வித் தகுதிக்கு மாறாக பொய்யான கல்வித் தகுதியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதனை தவெக சமூக வலைத்தளப் பக்கங்களும் பரப்பி வருகிறது.