YouTurn

தண்ணீர் விநியோகிப்பதை தடுத்த முன்னாள் கவுன்சிலர்! மாற்றி மாற்றி செய்தி வெளியிட்ட தனியார் சேனல்!

சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை என்பது தெரிந்ததுதான் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது இதை சமாளிக்க பலரும் அதிகம் உதவி செய்கின்றனர். ரஜினி ரசிகர் மன்றம், திமுக எம்எல்ஏ மா சுப்ரமணியம் மற்றும் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் இலவசமாக வழங்குவதை செய்திகளில் பார்க்க முடிந்தது. இதில்...

தண்ணீர் விநியோகிப்பதை தடுத்த முன்னாள் கவுன்சிலர்! மாற்றி  மாற்றி செய்தி வெளியிட்ட தனியார் சேனல்!
சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை என்பது தெரிந்ததுதான் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது இதை சமாளிக்க பலரும் அதிகம் உதவி செய்கின்றனர். ரஜினி ரசிகர் மன்றம், திமுக எம்எல்ஏ மா சுப்ரமணியம் மற்றும் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் இலவசமாக வழங்குவதை செய்திகளில் பார்க்க முடிந்தது.


இதில் திருமுல்லைவாயிலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தண்ணீர் வழங்கியது சர்ச்சையாக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் இலவசமாக மக்களுக்கு குடிநீர் வழங்க முயற்சித்தனர். அப்போது அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் பிரச்சனை செய்திருக்கிறார். இது தொடர்பான ஒரு காணொளி பரவியது அதில் மிகத்தெளிவாக நாம் தமிழர் கட்சிக்காரர்கள் நாங்கள் இந்த சட்டையை கூட கழட்டிடுறோம் என்று கூறி சின்னம் பொறித்த சட்டையை கழட்டி கையில் வைத்துக் கொள்கிறார்கள். கட்சிக்காரராக உதவுவதுதான் சிக்கல் என்றால் அது வேண்டாம் என்ற ரீதியில். அந்த முன்னாள் கவுன்சிலர் தண்ணி வேணும்னா என்னல நீ கேக்கணும் என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்கிறார் ஒரு முன்னாள் அதிகாரத்தில் இருந்த வரை எதற்காக வந்து கேட்க வேண்டும் என்ற கேள்வியை அவர்களும் வைக்கிறார்கள். அவர் போ போ என்கிறார்.

பின்பு போலீஸ்காரர்கள் அங்கு வந்து அவர்களை அழைத்து செல்ல முற்படும் போது பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். ஏம்மா உங்களையெல்லாம் கூப்பிடவே இல்லையே என்கிறார் ஒரு காவலர், அதற்கு எங்களுக்கு தண்ணீர் தருபவர்களை தானே அழைக்கிறீர்கள் அதனால் தான் கேட்கிறோம் என்கிறார் ஒரு பெண்மணி. ஆக உதவிய இளைஞர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் வந்துள்ளனர். இதை அப்படியே செய்தியாக வெளியிட்டு இருந்தது பாலிமர் டிவி.

பின்பு அந்த கவுன்சிலரிடம் தனியாக ஒரு இன்டர்வியூ எடுத்து தண்ணீர் சரியில்லை மக்களுக்கு மோசமான நிலையிலுள்ள தண்ணீரை தருகிறார்கள் என்று தான் கேட்டோம் என்றும் அதிலேயே தண்ணீர் பிரச்சனை இங்கேதான் இல்லையே தண்ணி பிரச்சனை உள்ள இடத்தில் கொடுங்கள் என்று சொன்னதாகவும் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். தண்ணீர் சரியில்லை என்பது பிரச்சனையா அல்ல தண்ணீர் அங்கு இது போதுமான அளவுக்கு இருப்பது என்பது தகவலா என்ற சிறு தெளிவும் இல்லை இதை அப்படியே செய்தியாக்கிய பாலிமர் தொலைக்காட்சி. முதலில் பாராட்டிய இவர்கள் பிறகு நாம் தமிழர் கட்சிக்காரர்களை கடிந்து கொண்டுள்ளனர். ஒரே தொலைக்காட்சியில் நிலைபாட்டை மாற்றி மாற்றி செய்தி வெளியிட்டு இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

உதவ முயற்சிக்கிறார்கள் அவர் எந்த கட்சிக்காரராக இருந்தால்தான் என்ன ஒரு முன்னாள் கவுன்சிலர் தன்னை இன்றும் கவுன்சிலர் என்றே நினைத்துக் கொண்டு அதைத் தடுக்க நினைப்பதும், சர்ச்சையானதும் அந்த கதையை மாற்றி மீண்டும் ஒருமுறை ஒரு பேட்டி கொடுப்பதும் மோசமான அரசியல் அதில் தொலைக்காட்சி ஒன்றும் தன் போன போக்கில் செய்தி வெளியிட்டிருப்பது தவறானதாகும்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை