YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

Man vs wild ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்திற்கு அடிபட்டதா வதந்தி| வெறும் முள் தாங்க !

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் சாகச நிகழ்ச்சியான " மேன் வெர்சஸ் வைல்ட் " இல் பேர்கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் தொடரின் ஷூட்டிங் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் பந்திப்பூர் வனப் பகுதியில் நடைபெற்றது. கடந்த ஆண்டில் " மேன் வெர்சஸ் வைல்ட் " நிகழ்ச்சியில் சிறப்பு தொடராக இந்திய பிரதமர்...

அச்சுறுத்தலை உண்டாக்கிய சீனாவின் கொரோனா வைரஸ் !

சீன தேசத்தில் பலரின் உயிரைப் பறித்து வரும் கொரோனா வைரஸ் (Corono virus) உலக நாடுகளில் அச்சுறுத்தலை உண்டாக்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் சீனாவின் ஹூபே மாகாணப் பகுதியில் மட்டும் 15 பேர் இறந்து உள்ளதாகவும், சீனா முழுவதும் 41 பேர் இறந்துள்ளதாகவும் சீன சுகாதார அதிகாரிகள் தரப்பில்...

ரஜினிகாந்த் பெரியார் சர்ச்சை : உண்மை என்ன ?

துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், " 1971-ல் சேலத்தில் பெரியார் அவர்கள் , ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் கொன்டு போனார்கள். அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். இதனால்...

பெங்களூரில் வங்கதேச அகதிகள் வசிப்பிடம் என பரவிய தவறான தகவலால் வீடுகள் இடிப்பு!

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் இந்திய அளவில் நடைபெற்றன. அதேபோல், சமூக வலைதளங்களில் போராட்டங்கள் தொடர்பாகவும், அகதிகள் தொடர்பாகவும் பல்வேறு தவறான வீடியோக்கள், செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில், இந்தியாவிற்குள் வந்த வங்கதேச அகதிகள்...

ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாத டெபிட், கிரெடிட் கார்டுகளின் ஆன்லைன் பரிவர்த்தனை சேவை ரத்து - ஆர்.பி.ஐ

இந்தியா முழுவதும் பல கோடி வங்கி கணக்கு தொடங்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலானோர் ஏடிஎம் கார்டை கூட பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக, பலருக்கு வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்கவே முடியாமல் அபாரதத் தொகை செலுத்த வேண்டி இருக்கிறது. நாட்டில் ஆளுக்கு ஒரு டெபிட் கார்டுகளை...

24 மொழிகளில் வெளியிடப்பட்ட கீழடி அகழாய்வு அறிக்கை புத்தகம் !

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் பணிகளில் இருந்து கி.மு 6-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த பண்டையத் தமிழர்கள் பயன்படுத்திய பழங்காலப் பொருட்கள் கிடைக்கப்பெற்றன. கீழடி குறித்த தொடர் செய்திகள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை ஒய்.எம்.சி.ஏ...

JNU பெண்கள் விடுதியில் செக்ஸ் டாய்ஸ், காண்டம் கிடைத்ததாக வதந்தி !

ஜனவரி 5-ம் தேதி டெல்லி ஜே.என்.யு பெண்கள் விடுதியில் தாக்குதல் நடந்த பொழுது அங்கிருந்து எடுக்கப்பட்டவை என செக்ஸ் டாய்ஸ் மற்றும் காண்டம் பாக்கெட் ஆகியவை தரையில் இருக்கும் புகைப்படங்கள் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாணவர்களின் போராட்டத்திற்கு எதிராக இருப்பவர்கள் பதிவிட்டு...

பார்க்கிங் பகுதியில் தானாக நகர்ந்து செல்லும் ஏணி | ஆவியா? அறிவியலா?

Infosys Mcity Confessions என்ற முகநூல் பக்கத்தில், சென்னையில் DLF-யின் பார்க்கிங் பகுதியில் ஏணி ஒன்று தானாக நகர்ந்து செல்லும் காட்சியைக் கொண்ட கீழ்காணும் 0.29 நொடிகள் கொண்ட வீடியோ பதிவாகி இருக்கிறது. Facebook link | archived link ஆச்சரியமான ஒன்றாக பதவிடப்பட்ட இவ்வீடியோ 40 ஆயிரம் பார்வைகளையும்...

காவலன் ஆப் உண்மையில் பாதுகாப்பானதா ?

நேற்று " தி ஹிந்து " வெளியிட்ட செய்தியில், காவலன் செயலி உண்மையில் பாதுகாப்பானதா, அதாவது அதிலுள்ள தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அதை மையப்படுத்தி யூடர்ன் வீடியோ வெளியிட்டு இருந்தோம். அது தொடர்பாக நாம் செய்த ஆய்வில் டெர்ம்ஸ் அண்ட் கண்டீசன் பகுதியில் காவலன்...

பாஜகவின் CAA ஆதரவு எண்ணை எப்படியெல்லாம் பரப்புகிறார்கள் தெரியுமா ?

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மிஸ்டு கால் கொடுக்குமாறு " 88662 88662 " என்ற எண் வெளியிடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் சிஏஏ 2019-க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 88662 88662-க்கு மிஸ்டு...

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற கல்லூரி மாணவியின் பின்புலம்.

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் நேற்று(ஜனவரி2-ம் தேதி) முதல் வெளியாகி வருகிறது. வெற்றிப் பெற்றவர்களின் விவரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செய்திகளில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. அதில், சூளகிரி பகுதியில் 21 வயது கல்லூரி மாணவி ஊராட்சி மன்றத் தலைவராக...