YouTurn

Man vs wild ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்திற்கு அடிபட்டதா வதந்தி| வெறும் முள் தாங்க !

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் சாகச நிகழ்ச்சியான " மேன் வெர்சஸ் வைல்ட் " இல் பேர்கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் தொடரின் ஷூட்டிங் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் பந்திப்பூர் வனப் பகுதியில் நடைபெற்றது. கடந்த ஆண்டில் " மேன் வெர்சஸ் வைல்ட் " நிகழ்ச்சியில் சிறப்பு தொடராக இந்திய பிரதமர்...

Man vs wild ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்திற்கு அடிபட்டதா வதந்தி| வெறும் முள் தாங்க !
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் சாகச நிகழ்ச்சியான " மேன் வெர்சஸ் வைல்ட் " இல் பேர்கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் தொடரின் ஷூட்டிங் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் பந்திப்பூர் வனப் பகுதியில் நடைபெற்றது.

கடந்த ஆண்டில் " மேன் வெர்சஸ் வைல்ட் " நிகழ்ச்சியில் சிறப்பு தொடராக இந்திய பிரதமர் கலந்து கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது. இதையடுத்து, திரைத்துறையைச் சார்ந்த நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் சிறப்பு தொடரின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டதாக வெளியான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும் கிண்டல் மீம்ஸ் பதிவுகளும் பதிவாகின.



இந்நிலையில், மேன் வெர்சஸ் வைல்ட் ஷூட்டிங் நடைபெறும் பொழுது நடிகர் ரஜினிகாந்திற்கு அடிபட்ட காரணத்தினால் ஷூட்டிங் கைவிடப்பட்டதாக மீம்ஸ் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தது.

ஆனால் ஷூட்டிங் முடிந்த பிறகு நள்ளிரவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், " மேன் வெர்சஸ் வைல்ட் ஷூட்டிங்கை முடித்து விட்டு வருகிறேன். ஷூட்டிங்கில் அடிபட்டதாக கூறுகிறார்கள், அப்படியெல்லாம் இல்லை. அங்கு நிறைய முள்கள் இருந்ததால் குத்தி உள்ளது. வேறு எதுவும் இல்லை " எனக் கூறி இருந்தார்.

மறுபுறம், நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஊடகங்களில் பெரிதும் பேசப்படுவதாக சமூக வலைதளங்களில் பல எதிர்மறையான கருத்துக்களும்  எழுகிறது.

Links : 

'Some Scratches... I'm Alright': Rajinikanth On 'Man vs Wild' Shoot
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை