YouTurn

JNU பெண்கள் விடுதியில் செக்ஸ் டாய்ஸ், காண்டம் கிடைத்ததாக வதந்தி !

ஜனவரி 5-ம் தேதி டெல்லி ஜே.என்.யு பெண்கள் விடுதியில் தாக்குதல் நடந்த பொழுது அங்கிருந்து எடுக்கப்பட்டவை என செக்ஸ் டாய்ஸ் மற்றும் காண்டம் பாக்கெட் ஆகியவை தரையில் இருக்கும் புகைப்படங்கள் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாணவர்களின் போராட்டத்திற்கு எதிராக இருப்பவர்கள் பதிவிட்டு...

JNU பெண்கள் விடுதியில் செக்ஸ் டாய்ஸ், காண்டம் கிடைத்ததாக வதந்தி !
ஜனவரி 5-ம் தேதி டெல்லி ஜே.என்.யு பெண்கள் விடுதியில் தாக்குதல் நடந்த பொழுது அங்கிருந்து எடுக்கப்பட்டவை என செக்ஸ் டாய்ஸ் மற்றும் காண்டம் பாக்கெட் ஆகியவை தரையில் இருக்கும் புகைப்படங்கள் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாணவர்களின் போராட்டத்திற்கு எதிராக இருப்பவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.



முகமூடி அணிந்த மர்ம நபர்கள் விடுதி அறைகளில் புகுந்து நாசம் செய்த பிறகு எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இந்நிலையில், அப்பல்கலைக்கழக மாணவர்களை கொச்சைப்படுத்தும் விதத்திலும், வேண்டுமென்றே தவறான தகவலை பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்தில் இவ்விரு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



உண்மையில், இவ்விரு புகைப்படங்களும் ஜே.என்.யு பெண்கள் விடுதியில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல. ஜனவரி 2018-ல் imgur என்ற தளத்தில் முதல் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில், " சமீபத்தில் அடமானத்தில் இருந்த வீட்டடை நான் சோதனையிட்டேன். அப்போழுது நான் நடந்த அறை " என்றேக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த புகைப்படத்தில் இருக்கும் அறை, தரை விரிப்பு மற்றும் பொருட்கள் ஆகியவற்றை பார்க்கையில் வசதியான வீடாக தெரிகிறது.



இரண்டாவதாக தரையில் காண்டம் இருக்கும் புகைப்படமும் imgur தளத்தில் 2015-ல் ஆகஸ்ட் மாதம் வெளியாகி இருக்கிறது. எனினும், அப்புகைப்படம் குறித்த பிற விவரங்கள் ஏதும் இணைக்கப்படவில்லை.

ஆக, ஏதோ ஒரு பகுதியில் எடுக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பே இணையதளத்தில் வெளியான புகைப்படங்களை வைத்துக் கொண்டு தெரிந்தே மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக வதந்தியைப் பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

ஜே.என்.யு மாணவர்களை தவறாக சித்தரிக்கும் இப்பதிவுகள் இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் இந்திய அளவில் பகிரப்பட்டு உள்ளது. ஆகையால், இந்த வதந்தி குறித்து பலரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

Proof link :

Room of dildos

Imgur photo 2
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை