YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் கணக்குகள் !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவரான கே.சிவன், சந்திராயன்-2 விண்கலம் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்ட பிறகு இந்திய அளவில் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டார். எனினும், நிலவில் இறங்க வேண்டிய விக்ரம் லேண்டர் உடைய தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட காரணத்தினால் அவர் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள்...

சர்ச்சையாகும் கேள்வித்தாள், மறுக்கும் பள்ளி.. பாடத்திட்டத்தைக் கவனித்தீர்களா !

சமீபத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 6-ம் வகுப்பு கேள்வித்தாளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மற்றும் முஸ்லீம் மதத்தினர் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெற்று உள்ளதாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டங்களை பெற்றது. பலரும் நம்மிடம் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் சர்ச்சைக்குரிய...

பள்ளிப்பாடத்தில் சாதி பிரிவினை | வைரலாகும் கேள்வித்தாள்.

கேந்திர வித்யாலயா பள்ளியில் 6-ம் வகுப்பு கேள்வித்தாளில் ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கும் தலித் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்பதில் இருந்து, சட்டமேதை அம்பேத்கரை சாதித் தலைவராக சித்தரித்து உள்ளதாக கேள்வித்தாள் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மையை அறிந்து கூறுமாறு...

முதல்வர் பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணம் - அரசுக்கா ? அரசியலுக்கா ?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு வாழ் தமிழர்கள், பிற முதலீட்டாளர்களிடம் இருந்து தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வெள்ளை வேட்டி, சட்டையில் வலம் வந்த முதல்வரை வெளிநாட்டில் கோட்...

இளம்பெண்ணை கொடூரமாக தாக்கும் வீடியோ | எங்கு நிகழ்ந்தது ?

இந்திய தேசத்தில் ஏதோ ஒரு மூலையில் பெண் குழந்தைகள் முதல் வயதான பெண்மணி வரை ஒவ்வொரு நாளும் கொடுமைகளை சந்தித்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. அதிலும், பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கிறது. மனித மிருகங்களால் பாலியல் சுரண்டலை அனுபவிக்கும் பெண்களை...

புல்லை உண்ணும் சிங்கம் | அதிசய நிகழ்வு அல்ல !

காட்டில் வேட்டையாடி மாமிசத்தை உண்ணும் சிங்கம் புல்லை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிக் கொண்டே இருக்கிறது.. 2019 ஆகஸ்ட் 29-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட செய்திகளில் சிங்கம் புல்லை உண்ணும் வீடியோவும் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள காம்பா வனப்...

உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் | இந்தியாவின் நிலை ?

உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் குறித்த ஆய்வு பட்டியல் ஒவ்வொரு ஆண்டிலும் ஆய்வு அமைப்புகள் மூலம் வெளியிடப்படுவது வழக்கம். அவ்வாறு வெளியாகும் நகரங்களின் பட்டியலின் மூலம் உலக நாடுகளின் உள்ள நகரங்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும். சமீபத்தில் Economist Intelligence Unit மூலம் வெளியான உலகின்...

நாசாவிற்கு அறிவியல் சுற்றுலா செல்லும் மதுரை மாணவி !

2019-ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான அறிவியல் போட்டியானது Go4guru என்ற கல்வி சுற்றுலா நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிறுவனமானது 2011-ம் ஆண்டில் இருந்து கல்வி சார்ந்த சுற்றுலாவை ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் மூலம் 4,000 இந்திய மாணவர்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளில்...

" கீரை அட்டை " - அண்ணாச்சிக் கதைகள்.

கல்லூரியில் படிக்கின்ற ரகுவிற்கு காலையில் 4 மணிக்கே வேலைகள் தொடங்கிவிடும். பால் பாக்கெட்டுகளை வீட்டிற்கே சென்று கொடுப்பது தான் அவரின் பகுதி நேர வேலை. இதை முடித்து விட்டு கல்லூரிக்கு செல்வார். இதில் கிடைக்கின்ற சொற்ப வருமானம் நோட்டு புத்தகங்கள் வாங்க உதவும். அது தந்தை பொருளாதாரச் சிரமத்தை...

உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை | மீண்டும் புதிய சிலை வைக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் இரு சமூக மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக பேருந்து நிலையத்தில் இருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டு கலவரம் மூண்டது. வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் முக்குலத்து புலிகள் அமைப்பில் மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார்...

பயங்கரவாதியின் புகைப்படம் என வெளியான தகவலுக்கு தமிழக டிஜிபி மறுப்பு !

லக்சர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை அளித்த எச்சரிக்கையால் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊடுருவிய 6 பேர்களில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் இருக்கலாம்...

காட்டுத் தீயால் அழிந்து வரும் அமேசான் காடுகள் | மனித பிழையும் காரணமா ?

பூமியின் நுரையீரல் ஆக கருதப்படும் அமேசான் காடுகள் தொடர்ச்சியாக அழிவை சந்தித்து வருவது மக்களை வருத்தமடையச் செய்துள்ளது. மலைக்காடுகளில் 16 நாட்களாக தொடர்ந்து எரியும் காட்டுத் தீயால் பல வகையான உயிரினங்கள் பெரும் பாதிப்பை கண்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு காடுகள் தீக்கிரையாகி உள்ளது...