YouTurn

புல்லை உண்ணும் சிங்கம் | அதிசய நிகழ்வு அல்ல !

காட்டில் வேட்டையாடி மாமிசத்தை உண்ணும் சிங்கம் புல்லை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிக் கொண்டே இருக்கிறது.. 2019 ஆகஸ்ட் 29-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட செய்திகளில் சிங்கம் புல்லை உண்ணும் வீடியோவும் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள காம்பா வனப்...

புல்லை உண்ணும் சிங்கம் | அதிசய நிகழ்வு அல்ல !
காட்டில் வேட்டையாடி மாமிசத்தை உண்ணும் சிங்கம் புல்லை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிக் கொண்டே இருக்கிறது..

2019 ஆகஸ்ட் 29-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட செய்திகளில் சிங்கம் புல்லை உண்ணும் வீடியோவும் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள காம்பா வனப் பகுதியில் பசுமையான புல்லை உண்ணும் காட்சி பதிவாகி இருக்கிறது.

சிங்கம் புல்லை உண்ணும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் , சிங்கம் புல்லை உண்பது இயல்பான விசயம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சில விலங்குகள் வயிற்றில் செரிமானப் பிரச்சனைகள் இருக்கும் பொழுது புல்லை உண்பது வழக்கம். செரிமானம் ஆகாமல் இருக்கும் உணவை வாந்தி எடுக்க புல்லை உண்ணும் என வன அதிகாரி சந்தீப் குமார் கூறியதாக செய்தியில் வெளியாகி உள்ளது.





சிங்கம் புல்லை உண்ணும் வீடியோவை சில ஆச்சரியமாக பார்க்கின்றனர், சிலர் இது சாதாரண நிகழ்வே என சமூக வலைதளங்களில் பகிர்வதை காண முடிகிறது.

Link : 

Video of a 'grass-eating' lion excites social media
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை