Monthly Rewind: 2024 ஜனவரியில் வைரலாகப் பரவிய பொய் செய்திகள், அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இதோ !

இந்த வருடம் தொடங்கியதில் இருந்தே அயோத்தியில் ராமர் கோவில் திறப்பது குறித்தே பல செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டன. மேலும் ஜெர்மனி நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் குறைந்த பட்ச வேகம் குறித்து அண்ணாமலை தவறாக பேசிய வீடியோவும், பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசிய பொய் செய்திகளும் சமூக ஊடகங்களில் பேசு பொருளாகின. இது தவிர உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பிற்கு முக்கிய காரணமே அதிக உப்பு தான் என WHO எச்சரிக்கை செய்திருந்தது குறித்து சிறப்பு கட்டுரை ஒன்றும் வெளியிட்டிருந்தோம். அவை குறித்த மொத்த தொகுப்புகளை இந்த கட்டுரையில் காண்போம்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான இடம் தொடர்பாக நீண்ட விசாரணைக்குப் பிறகு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019, நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதன் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் ஜனவரி 22 அன்று திறக்கப்பட்டது.
இந்நிலையில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் தான் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளதாக பல செய்திகள் பரவின.

Facebook link
இது குறித்து கூகுள் மேப் மூலம் தேடியதில், பரவி வரும் படத்தில் பாபர் மசூதி என்று தவறான இடத்தில், வட்டம் இடப்பட்டுள்ளது என்பதையும், அது ஒரு சீதா ராமர் கோயில். மேலும் தற்போது ராமர் கோயில் கட்டும் இடத்தின் ஆயத்தொலைவையும் (Coordinates) பாபர் மசூதி இருந்த இடத்தின் ஆயத்தொலைவையும் (26°47’43″N 82°11’39″E) ஒப்பீடு செய்து பார்த்ததில், மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் தான் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது.

மேலும் படிக்க: பாபர் மசூதியை இடித்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் ராமர் கோயில் கட்டுவதாகப் பரவும் தவறான தகவல்!
துபாய் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் மின்னொளியில் ஒளிர்ந்த ராமர் என்று கூறி, புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகத்துடன் ராமர் காட்சியளிப்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வந்தது. இதனை தந்தி டிவியும் செய்தியாக வெளியிட்டிருந்தது.

Twitter Link | Archive Link
இது குறித்து தேடியதில், குரூப் திரைப்படம் குறித்து வெளியிடப்பட்ட வீடியோவின் காட்சிகளை சிலர் ராமர் நிற்பது போன்று எடிட் செய்து, தவறாக சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிந்தது.

மேலும் படிக்க: துபாய் புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த ராமர் என எடிட் செய்யப்பட்ட படத்தை வெளியிட்ட தந்தி டிவி !
“அழிந்துவிட்ட ஜடாயு பறவைகள்” கூட்டம் அயோத்திக்கு வருவதாகப் பரப்பப்படும் பொய் :
ராமாயணத்தில் வரும் ஜாடாயு பறவைகள் அழிந்துவிட்டதாக சொல்லப்பட்டன. ஆனால் இவை அயோத்திக்கு இப்போது கூட்டமாக வருவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது.

Twitter Link | Archive Link
இது குறித்து தேடியதில், இது பழைய வீடியோ என்பதையும், கடந்த 2021-ல் இருந்தே பல நாடுகளை குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிந்தது.
மேலும் படிக்க: “அழிந்துவிட்ட ஜடாயு பறவைகள்” கூட்டம் அயோத்திக்கு வருவதாகப் பரப்பப்படும் பொய் !
எம்பி கனிமொழி அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ மணியை அனுப்பியதாக ஜீ நியூஸ் வெளியிட்ட பொய் செய்தி :
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து, 613 கிலோ எடையுள்ள ஒரு மணி, அயோத்தியை அடைந்துள்ளது. இந்த மணியை தமிழக எம்.பி.யான கனிமொழியின் குடும்ப உறுப்பினர்கள் தான் அனுப்பி வைத்துள்ளனர் என்று கூறி ஜீ நியூஸ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

Article Link | Archive Link
இது குறித்து ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டைச் சேர்ந்த SPE குழுமம் சார்பில் வழங்கப்பட்ட மணி என்பதை அறிய முடிந்தது. இச்செய்தியை எம்பி கனிமொழி தரப்பிடம் விசாரித்ததற்கு, அவர்களும் மறுத்துவிட்டனர்.

மேலும் படிக்க: எம்பி கனிமொழி அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ மணியை அனுப்பியதாக ஜீ நியூஸ் வெளியிட்ட பொய் செய்தி!
தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசிய வீடியோ ஒன்று இன்ஸடாகிராமில் வைரலாக பரவியது. அதில் அவர், “2013ல் காங்கிரஸ் ஒரு மசோதாவை தாக்கல் செய்ய முயற்சி செய்தது. அந்த மசோதாவின் கான்செப்ட் என்னவென்று தெரியுமா? இந்தியாவில் எங்கு கலவரம் நடந்தாலும், இந்துக்கள் மீது மட்டுமே FIR போட முடியும். கிருஸ்தவர்கள் மீதோ இஸ்லாமியர்கள் மீதோ FIR’ரே போடக்கூடாது." என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து தேடியதில், அஸ்வத்தாமன் சொல்வது போல் இந்த சட்ட மசோதாவிற்கு Anti-Violence Bill 2013 என்கிற பெயர் கிடையாது. இந்த சட்ட மசோதாவின் உண்மையான பெயர் ‘Prevention of Communal and Targeted Violence (Access to Justice and Reparations) Bill, 2011’ என்பதை அறிந்தோம். இது தொடர்பாக 2005ம் ஆண்டில் முதல் முறையாக ஒரு மசோதா கொண்டு வரப்பட்டு, பின்னர் பல ஆண்டுகளாக அந்த மசோதா எந்த முன்னேற்றமும் அடையாமல் இருந்ததால், இந்த மசோதா வாபஸ் பெறப்பட்டு புதிய மசோதா 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்ட்டது. ஆனால் இது சமர்பிக்கப்படாமலேயே (deferred) ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் கலவரம் ஏற்பட்டால் இந்துக்கள் மீது மட்டுமே வழக்கு பதியலாம் என்றும் இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்கள் மீது வழக்கு பதிய முடியாது என்றும் இந்த சட்ட மசோதாவில் எங்கும் கூறவில்லை. இந்த சட்டமே ஜாதி, மத கலவரங்கள் மூண்டால் அதிகம் பாதிப்பு அடையும் இடத்தில் இருக்கும் பட்டியிலின மக்களுக்கும், மொழி சிறுபான்மையினருக்கும், மத சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்யவே. எனவே அஸ்வத்தாமன் கூறிய கருத்துகள் தவறானவை.
மேலும் படிக்க: பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சொல்லும் பொய் !
தமிழ்நாடு செலுத்தும் வரியை காட்டிலும் அதிக நிதியை ஒன்றிய அரசு தந்துள்ளதாகப் பரப்பப்படும் பொய் :
‘விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா’ என்னும் பிரச்சாரம் தொடர்பாக கோடம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘2014-2023 காலக்கட்டத்தில் தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடி வரியாக பெற்றது; பெற்ற வரியை விட கூடுதலாக தமிழகத்திற்கு ரூ.6.69 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம்’ எனக் கூறியதாக தினமலர் ஒரு நியூஸ் கார்டினை பதிவிட்டிருந்தது.

X link
இது குறித்து ஆய்வு செய்ததில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய தொகையில் பிழை உள்ளது என்பதையும், அவர் நேரடி வரியை பற்றி மட்டும் கூறிவிட்டு தமிழ்நாடு அளித்த GST மற்றும் பிற வரி பற்றிய எந்த விவரத்தையும் கூறாமல் தவிர்த்து இருக்கிறார் என்பதையும் அறிய முடிந்தது.
மேலும் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு 2014 முதல் 2023-24 வரை வழங்கப்பட்டதாகப் பட்டியலிட்ட தொகையினை கூட்டினால் 5,53,377 கோடி ரூபாய்தான் வருகிறது (2,88,627 + 2,58,338 + 6,412). எந்த கணக்கின் அடிப்படையில் 6,96,666 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறினார் எனத் தெரியவில்லை. இப்படி தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: தமிழ்நாடு செலுத்தும் வரியை காட்டிலும் அதிக நிதியை ஒன்றிய அரசு தந்துள்ளதாகப் பரப்பப்படும் பொய் !
1530ம் ஆண்டே இறந்த பாபர், 1556ல் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக வீடியோவைப் பதிவிட்ட பாஜக :
அயோத்தி ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “கி.பி 1556 ஆம் ஆண்டில், பாபர் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து, மசூதியை கட்டினார்.” என்று குறிப்பிட்டு 1:26 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

Twitter Link | Archive Link
இது குறித்து ஆய்வு செய்ததில், முகலாயப் பேரரசின் முதல் மன்னரான பாபர் கி.பி 1530-ம் ஆண்டே இறந்து விட்டார், அவரது மகன் ஹிமாயூனும் கி.பி 1556ம் ஆண்டே இறந்து விட்டார். பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. தவறான தகவலுடன் வெளியிட்ட வீடியோவை பின்னர் பாஜக நீக்கியது.
மேலும் படிக்க: 1530ம் ஆண்டே இறந்த பாபர், 1556ல் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக வீடியோவைப் பதிவிட்ட பாஜக !
ஜெர்மனி நெடுஞ்சாலையின் குறைந்தபட்ச வேகம் குறித்து அண்ணாமலை சொன்ன தவறான தகவல் :
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2020, ஆகஸ்ட் மாதம் ‘கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளை’ நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "ஜெர்மனியில் Munich to Berlin நகரங்களுக்கு இடையே A6 நெடுஞ்சாலையில் (12 Lanes) குறைந்தபட்ச வேகமே 240 km/h. அதற்குக் குறைவான வேகத்தில் நீங்கள் போகக் கூடாது. நாங்கள் 260km/h வேகத்தில் சென்றோம். 600கி.மீ தூரத்தை 2.20 மணி நேரத்தில் பயணித்தோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து ஆய்வு செய்ததில், அண்ணாமலை சொன்னது போல் ஜெர்மனியில் Munich to Berlin இடையிலான சாலையின் பெயர் A6 கிடையாது A9. மேலும் அது 6 Lane சாலை. அச்சாலையின் செல்வதற்கான குறைந்தபட்ச வேகம் 60 – 110 Km. குறைந்தபட்ச வேகமே 240 km/h அதற்குக் குறைவான வேகத்தில் நீங்கள் போகக் கூடாது என அண்ணாமலை சொன்ன தகவல்கள் தவறானவை.
மேலும் படிக்க: ஜெர்மனி நெடுஞ்சாலையின் குறைந்தபட்ச வேகம் குறித்து அண்ணாமலை சொன்ன தவறான தகவல்!
சவுதி அரேபியா பள்ளி பாடத்திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம் சேர்க்கப்பட்டதாகப் பரவும் பொய் :
சவுதி அரேபியப் பள்ளிகளில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பிக்கப்படுகிறது என்று கூறி, ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டது.

X Link | Archive Link
இது குறித்து தேடியதில், இந்த பொய் செய்தி 2021ம் ஆண்டில் இருந்தே பரவி வந்துள்ளதை அறிய முடிந்தது. மேலும் சவுதி அரசின் தேசிய பாடத்திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் சேர்க்கப்படவில்லை. அம்மாநில அரசின் வினாத்தாள் அரபு மொழியில் தான் இருக்கும். ஆனால் பரவி வரும் வரலாறு பாடம் தொடர்பான வினாத்தாள் ஆங்கிலத்தில் உள்ளது. மேலும் தேடியதில் இது தனியார் பள்ளியில் வெளியிடப்பட்ட கேள்வித் தாள் என்பதையும் அறிய முடிந்தது.

மேலும் படிக்க : சவுதி அரேபியா பள்ளி பாடத்திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம் சேர்க்கப்பட்டதாகப் பரவும் பொய் !
உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பிற்கு முக்கிய காரணமே அதிக உப்பு தான் : WHO எச்சரிக்கை :
உலக சுகாதார நிறுவனம் “உயர் இரத்த அழுத்தம் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள்” குறித்த தனது முதல் அறிக்கையை கடந்த 2023 செப்டம்பர் 19 அன்று வெளியிட்டது. அதில் உலகில் மூன்றில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதம், மாரடைப்பு, இதய செயலிழப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகள் உயர் இரத்த அழுத்தத்தாலேயே ஏற்படுகின்றன. இத்தகைய உயர் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணம், மோசமான உணவு முறைகளே என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும் சோடியம் குளோரைடு என்று அழைக்கப்படும் உப்பில், சுமார் 40% சோடியம் மற்றும் 60% குளோரைடு உள்ளன. 2025 ஆம் ஆண்டுக்குள் சோடியம் உட்கொள்வதை மக்கள் 30 சதவீதமாவது குறைக்க வேண்டும் என்று கூறி எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க: உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பிற்கு முக்கிய காரணமே அதிக உப்பு தான் : WHO எச்சரிக்கை !
பாபர் மசூதியை இடித்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் ராமர் கோயில் கட்டுவதாகப் பரவும் தவறான தகவல் :
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான இடம் தொடர்பாக நீண்ட விசாரணைக்குப் பிறகு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019, நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதன் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் ஜனவரி 22 அன்று திறக்கப்பட்டது.
இந்நிலையில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் தான் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளதாக பல செய்திகள் பரவின.

Facebook link
இது குறித்து கூகுள் மேப் மூலம் தேடியதில், பரவி வரும் படத்தில் பாபர் மசூதி என்று தவறான இடத்தில், வட்டம் இடப்பட்டுள்ளது என்பதையும், அது ஒரு சீதா ராமர் கோயில். மேலும் தற்போது ராமர் கோயில் கட்டும் இடத்தின் ஆயத்தொலைவையும் (Coordinates) பாபர் மசூதி இருந்த இடத்தின் ஆயத்தொலைவையும் (26°47’43″N 82°11’39″E) ஒப்பீடு செய்து பார்த்ததில், மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் தான் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது.

மேலும் படிக்க: பாபர் மசூதியை இடித்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் ராமர் கோயில் கட்டுவதாகப் பரவும் தவறான தகவல்!
துபாய் புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த ராமர் என எடிட் செய்யப்பட்ட படத்தை வெளியிட்ட தந்தி டிவி :
துபாய் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் மின்னொளியில் ஒளிர்ந்த ராமர் என்று கூறி, புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகத்துடன் ராமர் காட்சியளிப்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வந்தது. இதனை தந்தி டிவியும் செய்தியாக வெளியிட்டிருந்தது.

Twitter Link | Archive Link
இது குறித்து தேடியதில், குரூப் திரைப்படம் குறித்து வெளியிடப்பட்ட வீடியோவின் காட்சிகளை சிலர் ராமர் நிற்பது போன்று எடிட் செய்து, தவறாக சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிந்தது.

மேலும் படிக்க: துபாய் புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த ராமர் என எடிட் செய்யப்பட்ட படத்தை வெளியிட்ட தந்தி டிவி !
“அழிந்துவிட்ட ஜடாயு பறவைகள்” கூட்டம் அயோத்திக்கு வருவதாகப் பரப்பப்படும் பொய் :
ராமாயணத்தில் வரும் ஜாடாயு பறவைகள் அழிந்துவிட்டதாக சொல்லப்பட்டன. ஆனால் இவை அயோத்திக்கு இப்போது கூட்டமாக வருவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது.

Twitter Link | Archive Link
இது குறித்து தேடியதில், இது பழைய வீடியோ என்பதையும், கடந்த 2021-ல் இருந்தே பல நாடுகளை குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிந்தது.
மேலும் படிக்க: “அழிந்துவிட்ட ஜடாயு பறவைகள்” கூட்டம் அயோத்திக்கு வருவதாகப் பரப்பப்படும் பொய் !
எம்பி கனிமொழி அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ மணியை அனுப்பியதாக ஜீ நியூஸ் வெளியிட்ட பொய் செய்தி :
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து, 613 கிலோ எடையுள்ள ஒரு மணி, அயோத்தியை அடைந்துள்ளது. இந்த மணியை தமிழக எம்.பி.யான கனிமொழியின் குடும்ப உறுப்பினர்கள் தான் அனுப்பி வைத்துள்ளனர் என்று கூறி ஜீ நியூஸ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

Article Link | Archive Link
இது குறித்து ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டைச் சேர்ந்த SPE குழுமம் சார்பில் வழங்கப்பட்ட மணி என்பதை அறிய முடிந்தது. இச்செய்தியை எம்பி கனிமொழி தரப்பிடம் விசாரித்ததற்கு, அவர்களும் மறுத்துவிட்டனர்.

மேலும் படிக்க: எம்பி கனிமொழி அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ மணியை அனுப்பியதாக ஜீ நியூஸ் வெளியிட்ட பொய் செய்தி!
இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள் மீது வழக்கு பதியவே கூடாது என காங்கிரஸ் சட்டம் கொண்டுவந்ததாக அஸ்வத்தாமன் சொன்ன பொய்கள்: