யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் “AI Impact Summit 2026” மாநாட்டில் சீன தயாரிப்பான ரோபோ நாய் ஒன்றை தங்களது தயாரிப்பு என்பதாக தவறாக விளக்கமளித்ததின் மூலமாக சர்ச்சைக்கு உள்ளாகியது. இதனை கேலி செய்யும் வகையில் ஸ்ரேயஸ் மனோகர் என்பவர் வெளியிட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
கம்ப்யூட்டர் கோடிங் லாங்குவேஜ் பற்றி கேட்டால்....
உனக்கு பிடித்த லாங்குவேஜ் எது ?
சமஸ்கிருதம்

விரிவான விளக்கம்
கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் இந்திய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் சீன தயாரிப்பான ரோபோ நாய் ஒன்றை தங்களது தயாரிப்பு என்பதாக தவறாக விளக்கமளித்ததின் மூலமாக சர்ச்சைக்கு உள்ளாகியது. அதனைத் தொடர்ந்து, அந்த பல்கலைக்கழகத்தை பலரும் கேலி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமஸ்கிருதமே தனக்கு பிடித்த சிறந்த கம்யூட்டர் கோடிங் லாங்குவேஜ் என்று கல்கோட்டியாஸ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் India AI Impact Summit 2026ல் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வெளிநாடுகளில், இனி இந்தியன் என்று சொல்லவே வெட்கப்பட வேண்டும்! ஒவ்வொரு தென் இந்தியனும் இப்படித்தானே எண்ணுகிறான்! ரொம்ப கேவலமா இருக்குடா! pic.twitter.com/WV5UhVQwaa
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது shreyas manohar என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிப்ரவரி 18 அன்று வெளியாகியிருந்தது. அதில் இந்தியா AI உச்சி மாநாடு 2026ல் கால்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேர்காணலில் கலந்து கொண்ட காட்சிகள் கசிந்தன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே போல் குறிப்பிட்ட இந்த வைரல் வீடியோ, அவரது யூடியூப் பக்கத்தில் கடந்த பிப்ரவரி 09, 2026 அன்று, ”POV: Humanities major interviewing for a software job” பதிவிடப்பட்டுள்ளது. “AI Impact Summit 2026” மாநாடு துவங்கியது பிப்ரவரி 16, 2026. ஆனால் அதற்கு முன்பு இருந்தே இந்த வீடியோ பதிவாகியிருந்தது உறுதியானது.
இதையடுத்து shreyas manohar என்பவரின் சமூக ஊடகப்பக்கங்களை ஆய்வு செய்த போது, இந்த நிகழ்வுடன் தொடர்புடைய வேறு சில வீடியோக்களும் பதிவாகியிருந்தது. அதில் பிப்ரவரி 19, 2026 அன்று பதிவிடப்பட்ட ஒரு வீடியோவில், இது குறித்து விளக்கமளித்திருந்தார். அதில் "நான்தான் வீடியோவில் இருக்கும் மாணவன். நான் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகராக இருக்கிறேன். கல்கோட்டியாஸ் பல்கலைக்கழக மாணவர் அல்ல. இது வேறு இடத்தில் படமாக்கப்பட்ட பழைய வீடியோ" என்று குறிப்பிட்டிருந்தார்.

முடிவு:
எனவே, கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் “AI Impact Summit 2026” மாநாட்டில் சீன தயாரிப்பான ரோபோ நாய் ஒன்றை தங்களது தயாரிப்பு என்பதாக தவறாக விளக்கமளித்ததின் மூலமாக சர்ச்சைக்கு உள்ளாகியது. இதனை கேலி செய்யும் வகையில் ஸ்ரேயஸ் மனோகர் என்பவர் வெளியிட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோ இது.